விருச்சிகம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கெடுதல்கள் எதுவும் சொல்வதற்கு இல்லை. கடந்த சில வருடங்களாகவே நீங்கள் படாத கஷ்டங்கள் இல்லை. அவைகளெல்லாம் உங்களுக்கு இனிமேல் வரப்போவது இல்லை. வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார்போல விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே இனிமேல் நடக்கும். குறிப்பாக அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் எவற்றை இழந்தீர்களோ, எங்கே நிம்மதியை தொலைத்தீர்களோ அவைகளை திரும்பப் பெறுவதற்கான நல்ல நிகழ்வுகள் நடப்பதற்கான மாதம் இது.


கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. கடந்த சில மாதங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இனி நிறைவேற்றிக் கொள்வீர்கள். கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலைமையில் இருப்பதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிறப்பான ஒரு நிலையை அடையப் போகிறீர்கள். எட்டில் ராசிநாதன் செவ்வாய் அமர்வதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வெகு நாட்களுக்கு பிறகு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.

வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் வலுப் பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. இளைஞர்கள் உற்சாகத்துடனும், செயல்திறனுடனும் காணப்படுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். தந்தையைப் பற்றியோ தந்தைவழி உறவினர்கள் பற்றியோ கவலைகள் வரும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும்.

1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம்தேதி மாலை 6.17 முதல் 14 -ம் தேதி காலை 6.20 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் சுப நிலையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.