மேஷம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் மூன்றில் மறைந்தும் பிற்பகுதியில் வக்கிர நிலையில் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலையில் நவம்பர் மாதம் பிறக்கிறது. அதைவிட மேலாக தனாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்க்கிறார். மேஷ   ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் தீரும் மாதம் இது. குறிப்பிட்ட பலனாக ஆறாம் இடத்திற்கு குருபார்வை இருப்பதால் கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். எதிர்ப்புகளும் எதிரிகளும் கடன்களும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில் நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.

இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி வரும். தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் என்றும் உங்களுக்கு சந்தோசம்தான். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும்.

சுக்கிரன் எட்டில் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். சிலருக்கு தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். அரசுவேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். அதன் மூலம் மன அழுத்தமும் உண்டு. பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தனஸ்தானம் வலுவடைவதால் உங்களில் சிலருக்கு மறைமுகமான இதர வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும்.  23 -ம் தேதி மாலை 4.03 முதல் 25 -ம் தேதி மாலை 5.21 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.