மீனம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மீனம்:

மீன ராசிக்கு இந்த மாதம் ஒரு குறிப்பிட்ட பலனாக இரண்டில் இருக்கும் ராகு உங்களுக்கு சூதாட்டம் பங்குச்சந்தை போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் ஆசையைத் தூண்டி விட்டு சிக்கலில் மாட்டி விடக் கூடும். மீன ராசியினர் இந்த மாதம் கண்களையும், காதுகளையும் கூர் தீட்டி வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள். சூதாட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். பங்குச் சந்தை வேண்டவே வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரவிருப்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.


ராசிநாதன் ராசியிலேயே வலுவாக இருப்பதால் பண விஷயத்தை தவிர மற்றவைகள் கைகொடுக்கும் மாதம்தான் இது. இளைய பருவத்தினருக்கு வாழ்க்கை அமைவதற்கான முன்னேற்பாடுகள் இருக்கும்.  சிலருக்கு இவர்தான் வாழ்க்கைத்துணை என்ற அடையாளம் காட்டும் நிகழ்வு இப்போது குருவின் தயவால் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அந்தஸ்து கௌரவம் உண்டு. நல்ல அறிமுகங்கள் இப்போது கிடைக்கும். அவற்றை மீன ராசிக்காரர்கள் உபயோகப் படுத்திக் கொள்வீர்கள்.  பெண்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களுடைய திறமைகள் மதிக்கப்படும். உங்களை வெறும் பெண்ணாக மட்டும் பார்த்து தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருப்பவர்களை அலட்சியமாக புறம் தள்ளுவீர்கள்.  

ஒரு சிலர் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களை அனுபவிப்பீர்கள். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்கிற பழமொழியை மனதில் கொள்பவர்களுக்கு சஞ்சலங்கள் இருக்காது. குழந்தைகள் விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டி இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். நிதானமாக இருங்கள். மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும்.

4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி பகல் 12.30 முதல் 23-ம் தேதி மாலை 4.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.