மிதுனம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மிதுனம்:

அஷ்டமச்சனி முடியப்போவதால் இந்த மாதத்தில் இருந்தே மிதுன ராசிக் காரர்களுக்கு நன்மைகள் நடக்க ஆரம்பித்து விடும். கண்ணுக்கு எட்டிய தூரத்தில்தான் வழியும், ஒளியும் இருக்கிறது என்பதால் நீங்கள் உற்சாகமாக இருக்கக்கூடிய மாதமிது. கவலைகள் தீரப் போகின்றன. சனியால் பாதிக்கப்பட்ட இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் சுக்கிரனின் வீட்டிலும் பிற்பகுதியில் குருவின் பார்வையிலும் இருப்பதால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. மிதுனத்தினருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு. சனி முடிவது பெரிய நிம்மதியை உங்களுக்குத் தரும்.

வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. மாத முற்பகுதியில் சூரியன் நீச்சமாவதால் தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இதுவரை தொழில் நிலைமை சரி இல்லாமல் இருந்தவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். அஷ்டமச் சனி முடியப்போவதால் சிலருக்கு நல்ல வேலைமாற்றம், நல்ல தொழில் மாற்றம், நல்ல வீடு மாற்றம் என மாற்றங்கள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். அந்நிய இன,மத,மொழிக்காரர்கள் உதவுவார்கள். நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு.

1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி மாலை 6.04 முதல் 29-ம் தேதி இரவு 7.51 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.