மகரம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மகரம்:

கடந்த மூன்று வருடங்களாக எதுவுமே நடக்காமல் கடுமையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் யார் என்றால் கண்களை மூடிக்கொண்டு மகர ராசிக்காரர்கள் என்பதை சொல்லிவிடலாம். அதிலும் உங்களில் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அத்தனையும் முடிந்து நல்ல காலம் பிறக்கப்போகிறது என்பதை ஜோதிடரீதியாக மகரராசிக்காரர்களுக்கு சொல்லிவிடலாம். கடுமையான துன்பங்களை தரக்கூடிய ஜென்மச்சனி எனும் அமைப்பு 90 சதவிகித மகர ராசிக்காரர்களை வயதிற்கு ஏற்றார் போல ஆட்டி வைத்து விட்டது. இத்தகைய ஜென்மச் சனியிலும் துன்பங்களை அனுபவிக்காத 10 சதவிகித மகர ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.


கஷ்டங்களை அனுபவித்த மகரத்தினருக்கு விடுதலை வரப்போகிறது என்பதே  நவம்பர் மாதத்தின் நல்ல செய்தியாக இருக்கும். இனிமேல் இளைய பருவ மகரத்தினர்  வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறீர்கள். அவரவர்களின் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றபடி சனியின் கொடுமைகள் விலகிக் கொண்டிருக்கிறது. புது மனிதன் ஆகப் போகிறீர்கள். இளைஞர்கள் அதிகமான கெடுபலன்களை சந்தித்து விட்டீர்கள். இளம் வயதினர் தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு சோதனைகள் இருந்து வந்தன. துன்பங்களை அனுபவித்த அனைவரும் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள்.

நவம்பர் மாதம் மகரத்திற்கு எவ்வித கெடுபலன்களும் நடக்காத மாதமாக இருக்கும். இந்த மாதம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வலிமையை தரும். வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சனைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தீர்வுக்கான பாதைகள் தெரிய ஆரம்பிக்கும். நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புக்கள் தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள் கெடுபலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள். நீண்டநாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும்.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி மாலை 6.58 முதல் 19-ம் தேதி அதிகாலை 5.28 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.