தனுசு: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

தனுசு:

ராசிநாதன் குரு நான்காமிடத்தில் ஆட்சி நிலையில் இருக்க, கடந்த சில வருடங்களாகவே எதிலும் கை கொடுக்காமல் இருந்துவந்த ஏழரைச்சனி அமைப்பு இன்னும் சில வாரங்களில் உங்களை விட்டு முழுமையாக விலகப் போகிறது. சுருக்கமாக சொல்ல போனால் தனுசை விட்டு இருள் நீங்கப் போகிறது. நீங்களே ஒரு ஒளிமயமானவராக மாறப்போகிறீர்கள். இதுவரை புரிந்து கொள்ளப்படாமல் இருந்த சில விஷயங்கள் இப்பொழுது உங்களுடைய கவனத்திற்கு வந்து அதன்மூலம் உங்களுடைய திறமை உங்களுக்கே  தெரியப் போகிறது. தனுசுக்கு வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் கை கூடி வரும் மாதமிது.  இனி எல்லாம் நன்றாக இருக்க போகிறது என்கின்ற நம்பிக்கை மனதிற்குள் வரும். தனுசுவினர் எல்லோருமே ஏதேனும் ஒரு வகையில் சிறப்புக்களை பெறப் போகிறீர்கள்.


மனோபலம் அதிகரிக்கும் மாதம் இது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களில் சிலர் பணியிடங்களில் நல்ல பெயர் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. இளைய பருவத்தினருக்கு எதிர்காலத்தை பற்றிய பயங்கள் விலகும். முன்னேற்ற முயற்சிகளை இப்போது செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கோட்சார அமைப்புப்படி இனிமேல் எதிலும் யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய டீலர்ஷிப் எடுத்தல்,  முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் சிக்கல்கள் நல்லபடியாக முடியும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் தற்போது பக்கத்தில் வருவார்கள். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். பிள்ளைகளால் இனி நல்ல சம்பவங்கள் உண்டு. நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். நீண்டநாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள். எதுவும் எல்லை மீறாது. தனுசு இனிமேல் நன்றாக இருக்கும். கடவுள் துணையிருப்பார்.

2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி காலை 6.20 முதல் 16-ம் தேதி மாலை 6.58 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.