சிம்மம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் மாத பிற்பகுதியில் குருவின் பார்வையில் இருப்பதால் சிம்மத்திற்கு இது நல்ல மாதமே. ஆயினும் ஆரம்பத்தில் சூரியன் நீச்ச நிலையில் இருப்பதால் எதிலும் தாமதங்கள், தடைகள் இருக்கும். முயற்சிகளுக்கு பின்பே வெற்றிகள் வரும். ஆனால் ராசிநாதன் முறையான நீச்ச பங்க அமைப்பில் முதலில் சுக்கிரனோடு இணைந்து, பின்பு குருவின் பார்வையில் இருப்பதால் அப்படி ஒன்றும் பெரிய கஷ்டங்கள் வந்து விடாத ஒரு நல்ல மாதமாக நவம்பர் மாதம் இருக்கும். சிம்மத்திற்கு தொல்லைகள் எதுவும் இப்போது இல்லை.


பனிரெண்டாமிடத்தை குரு பார்ப்பதால் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் செல்வீர்கள். பிறந்தநாட்டை விட்டு வேறுநாட்டில் இருப்பவர்களுக்கு  நன்மைகள் நடைபெறும். பெண்களால் செலவுகள் உண்டு. ஒன்பதில் ராகு இருப்பதால் அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்லவிதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம்.

வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலை மாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.  மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நல்ல பணவரவு இருக்கும் என்பதால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விடுவீர்கள். அதிலும் தொழில் ஸ்தானத்தை நான்கு கிரகங்கள் தொடர்பு கொள்வது நல்ல அமைப்பு. வீண்செலவு செய்யாதீர்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி மாலை 6.19 முதல் 7-ம் தேதி அதிகாலை 12.04 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.