கும்பம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கும்பம்:

அப்படி ஒன்றும் பெரிய கெடுபலன்கள் நடக்காத மாதமாகவே கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அமையும். அதே நேரத்தில் எதிலும் ஒரு நிறைவு இருக்காது என்பதே உண்மை. 30 வயதுகளில் இருப்பவர்கள் சில வித்தியாசமான அனுபவங்களை இந்த மாதம் சந்திப்பீர்கள். இளைஞர்களுக்கு இந்த மாதம் சில அறிமுகங்கள் இருக்கும். அதன் மூலமான மன அழுத்தங்கள் வரப் போகின்ற மாதங்களில் உண்டு. காதல் வேண்டாம் என்றால் கேட்கவா போகிறீர்கள்? ஆகவே காதல் செய்வீர்கள். யாரிடமும் எதையும் கொடுக்க வேண்டாம். பணம் பற்றிய புரிதல்கள் வரக்கூடிய மாதமிது. சொந்த பந்தங்கள் இனிமேல் கைகொடுக்காது.


கும்ப ராசிக்காரர்கள் வேலைக்கு அஞ்சாதவர்கள் என்பதுதான் உண்மை. பணியிடங்களில் உங்களைத்தான் ஏமாற்றுவார்கள். அதிக வேலை உங்களுக்குத்தான் இருக்கும். மற்றவர்கள் வேலை செய்வது போல நடிக்க அலுவலகத்தின் மொத்த வேலையையும் நீங்கள் ஒருவராக செய்யக்கூடிய மாதம் இது. ஒன்பதில் இருக்கும் கேது வயதானவர்களுக்கு இதுவரை தரிசிக்க இயலாத புனிதத் தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை  தருவார். வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். குடும்பத்தில் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

சிலருக்கு முதல் திருமண தொடர்புகளின் மூலம் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல  இப்போது கிடைக்கும் அனுபவங்களால் இனிமேல் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி காலை 5.28 முதல் 21-ம் தேதி பகல் 12.30 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.