கன்னி: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லவைகள். இனி நடக்க ஆரம்பிக்க இருக்கிறது என்பதை உணர்த்துகின்ற மாதமாக நவம்பர் மாதம் அமையும். உங்களுடைய முயற்சிகள் அத்தனையும் வயதிற்கு ஏற்றார்போல பலன் தருகின்ற சிறந்த மாதமிது. இளையவர்களுக்கு வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத்துணை அடையாளம் காட்டப்பட போகிறது. வேலை, தொழில், வியாபார அமைப்புகளில் சிறப்பான பலன்கள் நடக்க இருக்கின்றன. வேலை இல்லாதவர்களுக்கு வேலை, தொழில் சரியில்லாதவர்களுக்கு நிரந்தரமான தொழில் அமைப்பு, வியாபாரிகளுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு லாபங்கள் வரக்கூடிய நிலை என கன்னி ராசிக்காரர்கள் எந்த துறையில் இருக்கிறீர்களோ அந்த துறையில் சாதிக்கின்ற நல்ல மாதம் இது.


ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீர தொடங்கும். இளையவர்களுக்கு வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். கலைத்துறையினர், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், ரெக்கவரி வெரிபிகேஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும்.

வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது பொன்னான நேரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. மாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். ராசிநாதன் வலுப் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மனதிற்குள் சோகத்தை கொண்டிருந்தவர்கள் இனி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள்.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி அதிகாலை 12.04 முதல் 9-ம் தேதி காலை 7.58 வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.