கடகம்: 2022 நவம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கடகம்:

நவம்பர் மாதம் முழுவதும் யோகாதிபதி குருவின் பார்வை ராசிக்கு இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு. இந்த அமைப்பின் காரணமாக எது வந்தாலும் கடக ராசிக்காரர்கள் அதனை நல்ல விதமாகவே எதிர்கொண்டு சமாளிக்கவும் செய்வீர்கள். தனாதிபதி சூரியன் நீச்சபங்கம் அடைவதால் பொருளாதார விஷயத்தில் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. அதேநேரத்தில் வேலை தொழில் அமைப்புகளில் எந்த ஒரு காரியமும் கடும் முயற்சிக்கு பிறகுதான் நிறைவேறும். மாத பிற்பகுதியில் சூரியன் நீச்ச நிலை விலக பெறுவது நல்ல அமைப்பு.  பதினைந்தாம் தேதிக்குப் பிறகு கடகத்திற்கு எதிலும் வெற்றி கிடைக்கும்.


குருபகவான் ஒன்பதில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். கடகத்திற்கு மிகவும் நன்மை தரும் அமைப்பு இது. மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் நன்மைகள் உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது நல்ல மாதம். சுக்கிரன் குருவின் பார்வையில் சுபவலுவாக உள்ளதால் திறமையை வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

கூட்டுத் தொழிலில் கசப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பங்கு பிரிப்பது, தனிக்குடித்தனம் போவது போன்றவைகள் இப்போது கூடாது. தேவையின்றி எவருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சகோதரர்கள், பங்காளி போன்ற உறவினர்களிடம் விரோதம் வரும் மாதம் இது. அலுவலகத்திலும் உங்களுடைய பேச்சால் சில வீண் விரோதங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்தொல்லை எல்லை மீறாது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சூரியன் நீச்சபங்கமாக இருப்பதால் தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வீரகள். ஆனால் தொழிலில் காலூன்றுவீர்கள்.

1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி பகல் 2.16 முதல் 4-ம் தேதி மாலை 6.19 வரையும், மாத இறுதியில் 29-ம் தேதி இரவு 7.51 முதல் டிசம்பர் 1-ம் தேதி இரவு 11.48 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.