விருச்சிகம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கோட்சார ரீதியாக மிகவும் நல்ல அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஏழரைச்சனியின் தாக்கத்தினால் கடுமையான துன்பங்களை அடைந்தவர்கள் அனைவருக்குமே இப்பொழுது படிப்படியான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. உங்களில் சிலர் அதை இன்னும் உணராவிட்டாலும் கூட இந்த அக்டோபர் மாதத்தில் விருச்சிகத்தினர் அனைவருமே நன்றாக இருக்கக்கூடிய மாறுதல்கள் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார்போல நிச்சயம் நடக்கும். விருச்சிகத்திற்கு இனி என்றுமே வேதனைகள் இல்லை என்பதுதான் கோட்சார நிலையில் கிரகங்கள் சொல்லுகின்ற செய்தி.


அதேநேரத்தில் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் உங்களில் சிலர் இன்னும்  கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கூட இந்த மாதம் மாற்றங்கள் இருக்கும்.  ராசியின் யோக கிரகங்களான குரு, சூர்யன் ஆகியோர் மிக நல்ல அமைப்பில் இருக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசியை பார்க்கும் நிலையில் இருக்கிறார். உங்களுடைய நேர்மையான எண்ணங்கள் அனைத்தும் மற்றவர்களுடைய உதவியின்றி உங்களாலேயே நிறைவேறுகின்ற மாதம் இது.  இளையவர்களுக்கு புதிய பாதை தெரியும். இந்த மாதம் அறிமுகம் ஆகின்றவர்கள் உறவாகவோ, நட்பாக மாறுவார்கள். கடந்த காலங்களை போல் அல்லாமல் மன அழுத்தம் கொடுத்த காதல் இப்போது இன்பமாக நிறைவேறும். காதலித்தவர் உங்களை புரிந்து கொள்வார். நினைத்தவரையே மணமுடிப்பீர்கள். வேலை நன்றாக இருக்கும்.  பணியிடங்களில் பாராட்டப்படுவீர்கள். தொழில் நன்கு அமையும். வியாபாரம் செழிக்கும்.  லாபம் வரும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணையும். கடந்த காலங்களில் உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் இப்போது வந்து மன்னிப்பு கேட்பார்கள்.

வழக்குகள் வெற்றி பெறும். கடன் தீரும். வயதானவர்களுக்கு நோய் தொந்தரவுகள் இருக்காது அல்லது கட்டுக்குள் இருக்கும். மகன், மகள், பேரன், பேத்திகள் போன்றவர்கள் உங்களை கவனிப்பார்கள். நீங்களும் அவர்களுக்கு செய்வீர்கள். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. மாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள்.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி அதிகாலை 10.01 முதல் 17 -ம் தேதி இரவு 10.28 வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.