ரிஷபம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

ரிஷபம்:

மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் ராசிநாதன் சுக்கிரன் நீச்ச நிலையில் இருப்பது போல தோன்றினாலும் அவர் முறையான நீச்சபங்க அமைப்பிலும் குருவின் பார்வையிலும் இருப்பது ரிஷபத்திற்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடிய ஒரு அமைப்பு. அதைப் போலவே பின் இரண்டு வாரங்கள் அவர் ஆட்சி நிலையில் இருப்பதும் அக்டோபர் மாதம் நல்ல பலன்களை மட்டுமே ரிஷப ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் என்பதைக் காட்டுகிறது . மாதம் முழுவதும் குருபகவான் பதினோராம் இடத்தில் இருந்து 3,5,7ம் இடங்களை பார்த்து கொண்டிருப்பதால் இந்த மாதம் முயற்சிகள் அனைத்தும் பலிப்பதும், அதிர்ஷ்டம் நல்லவிதமாக செயல்பட்டு சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுப்பதும், இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, தொழில் போன்றவைகளில்   நல்லவைகள் நடப்பதுமாக இருக்கும்.


மாத பிற்பகுதியில் செவ்வாய் வாக்கு ஸ்தானத்திற்கு மாறுவதால் உங்களில் சிலருக்கு கோபம் வரக்கூடிய சூழல்கள் வரும். பேச்சில் கவனமாக இருங்கள். யாரையும் மனம் நோக பேசி விடாதீர்கள். இந்த அமைப்பு உறவிலோ, நட்பிலோ சற்று பிரிவினைகளை கொடுக்கும் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. சிலருக்கு தேவை இல்லாத இடத்தில் வாக்குறுதி கொடுக்கக்கூடிய நிலைகள் உண்டாகும். மற்றவர்களுடைய கடனுக்கோ அல்லது வேறு பிரச்னைகளுக்கோ ஜாமீன் நிற்பதை இந்த மாதம் செய்யக்  கூடாது. வேண்டாம். உங்களில் சிலருக்கு வேலை, தொழில், அமைப்புகளில் தற்போதுள்ள முன்னேற்றமில்லாத சூழ்நிலை மாறி விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். வீட்டில் சுபகாரியம் உண்டு.

ஆறு, பன்னிரண்டாம் இடங்களில் இருக்கும் கேதுவும், ராகுவும் நல்ல பலன்களைச் செய்வார்கள் என்பதால் மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். அந்நிய மத, இன, மொழி நண்பர்கள் உதவுவார்கள். ஆறில் உள்ள கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத் தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை  தருவார். பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பதுபோல கடந்த இரண்டு வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் இனிமேல் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அறிமுகமற்றவர்களை எதிலும் நம்பி விடாதீர்கள். புதிய நண்பர்களால் பிரச்னைகள் வரும். கவனம்.

3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம் தேதி அதிகாலை 3.11 முதல் 4-ம் தேதி காலை 6.02 வரையிலும்,  மாத இறுதியில் 29-ம் தேதி காலை 9.05 முதல் 31ம் திகதி காலை 11.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.