மேஷம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் இடத்திலும், பிற்பகுதி இரண்டு வாரங்கள் முயற்சிகளை பலிக்க வைக்கின்ற மூன்றாமிடத்திலும் இருக்கிறார். அனைத்தும் நல்லபடியாக நடக்கக்கூடிய மாதம்தான் இது. முதல் 15 நாட்களுக்குள் தேவைப்படுகின்ற வருமானம் வந்து விடும். ஐந்தாமதிபதி சூரியன் முற்பாதியில் குருவின் பார்வையிலும், பிற்பாதியில் சுக்கிரனின் இணைவோடும் சுபத்துவமாக இருப்பதால் அரசு சார்ந்த பணிகள் முழுமையாக நிறைவேறும். அரசு காண்டிராக்டர்களுக்கு வருமானங்கள் இருக்கும். அரசு வேலைக்கான தேர்வுகளுக்காக படித்து கொண்டிருப்பவர்களுக்கும், அரசு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் இருக்கும். முயற்சிகள் பலிக்கக்கூடிய மாதம்தான் இது.  


இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைமைகள் அனைத்தும் இப்போது மாறும். ஆறாமிடம் குருவின் பார்வையால் சுபத்துவப்படுவதால் இதுவரை திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்காத இளைய பருவத்தினருக்கு வேலை முயற்சிகள் வெற்றியைத் தரும். இன்டர்வியூக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன், ஆனால் சாதகமான பதில் இல்லை எனும் கவலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திறமைக்கேற்ற வேலை இல்லையே எனும் வருத்தங்களில் இருப்பவர்கள், டார்கெட் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டு.

இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும் மாதம் இது. ஆனால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் வீணடிப்பீர்கள். இளையவர்கள் கவனம் சிதறும் மாதம் இது. தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்காலத்திற்குரிய விஷயங்களை செய்யாமல் வயதுக்குரிய காதல் போன்ற விஷயங்களில் சக்தியை இழப்பீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும். மணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். நீண்ட நாட்களாக திருமணம் தாமதமாகி வருபவர்கள் இந்த வருடத்தில் வாழ்க்கைத் துணையோடு இணைவீர்கள். சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண்அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். சிலருக்கு இளைய சகோதர்களால் வீண் விரயங்களும் செலவுகளும் இருக்கும். வியாபாரிகள் மந்தமான ஒரு நிலையை சந்திப்பீர்கள்.

5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 27 -ம் தேதி காலை 6.30 மணி முதல் 29 -ம் தேதி காலை 9.05 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.  

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.