மீனம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மீனம்:

அக்டோபர் முதல் மீன ராசிக்காரர்களின் குடும்பத்தில் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். ராசியில் ஆட்சியாக இருக்கக்கூடிய குருவின் ஏழாம் இட பார்வையால் கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. ராசிநாதனின் வலுவால் கடந்த வருடங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இப்போது நிறைவேற்றிக் கொள்வீர்கள். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் உற்சாகத்துடனும், செயல்திறனுடனும் காணப்படுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும்.


அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதமே. காவல்துறையினருக்கு திருப்பங்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். தந்தையைப் பற்றியோ தந்தைவழி உறவினர்கள் பற்றியோ கவலைகள் வரும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும். ராகு கேதுக்கள் 2, 8 ம் இடங்களில் இருப்பது பங்குச் சந்தை போன்ற யூக வணிகம், சூதாட்டம், இன்டெர்நெட் வியாபாரம் போன்றவைகளில் நஷ்டத்தை தரும் என்பதால் நேரடியான வியாபாரத்தில் இல்லாத மீன ராசிக்காரர்கள் இப்போது கவனமாக இருக்க வேண்டும்.  எதிலும் பேராசைப்படாதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டவே வேண்டாம். பணத்தை இழப்பீர்கள்.  

மாத பிற்பகுதியில் சுக்கிரன் எட்டில் மறைந்து கேதுவுடன் இணைவதால் பண இழப்புக்கள் இருக்கும். கவனமாக இருங்கள். உங்களில் சிலருக்கு பெண்கள் சார்ந்த விஷயங்களிலும் இழப்புக்கள் வரும் இளைய பருவத்தினருக்கு காதலியால் மன அழுத்தம் உண்டு. சிலருக்கு வயதிற்கு ஏற்ற வகையில் பெண் வழி உறவுகளால் மன சங்கடங்கள் வரும். ஆகவே குடும்பத்தில் கூட உறவுகளை நிதானமாக அணுக வேண்டிய மாதமாக இது இருக்கும். சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் நிலம் வாங்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வரும். ஆனால் இந்த மாதமே முடியாது. சிலக்கு கிழக்கு நோக்கிய பயணங்கள் உண்டு. சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலியா போன்ற கிழக்கு தேசங்களில் இருப்பவர்களுக்கு இருக்கின்ற இடங்களில் வேலை தொழில் அமைப்புகள் நன்றாக இருக்கும். இதுவரை நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்ற கவலைகளில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வருகின்ற மாதம் இது.

1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம்தேதி அதிகாலை 2.33 முதல் 27 -ம் தேதி காலை 6.30 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.