மிதுனம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மிதுனம்:

கிட்டத்தட்ட மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் உச்ச நிலையில் குருவின் பார்வையில் இருப்பதும், மாத இறுதியில் ஐந்தாமிடத்திற்கு அவர் மாறி சுக்கிரனோடு இணைந்திருப்பதும் மிகப்பெரிய நல்ல பலன்களை இந்த மாதம் முதலும், இனிமேலும் மிதுன ராசிக்காரர்களுக்கு கோட்சார கிரக நிலைகள் கொடுக்க இருக்கின்றன என்பதைக்  காட்டுகிறது. கடுமையான அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் உள்ள மிதுன ராசிக்காரர்கள் அனைவரும் படிப்படியாக அதிலிருந்து வெளியே வரக் கூடிய நல்ல மாற்றங்கள் இந்த மாதத்திலிருந்து உருவாகும். குறிப்பாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்தே அனைத்து பிரச்சனைகளும் தீர ஆரம்பிக்கும்.  புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு பிரச்சனைகள் முடிவதற்கான படிப்படியான மாற்றங்கள் தொடங்கும்.


எல்லா நிலைகளிலும் மிதுனம் யோகமாக இருக்கக்கூடிய காலகட்டம் ஆரம்பமாக இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக நீங்கள் பட்டுக் கொண்டிருக்கும் தொல்லைகள் அனைத்தும் விலகப்போகிறது. விடிவு என்கின்ற கரை தூரத்தில் தெரிகிறது. நீங்கள் ஏற வேண்டியதுதான் பாக்கி. இதுவரை செயல்படாத அதிர்ஷ்டம் இனிமேல் செயல்படுவதை உணரப் போகிறீர்கள். கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக எந்த பிரச்சனையில் உங்களுக்கு கடுமையான மன அழுத்தம் இருந்து வந்ததோ அவைகள் அனைத்தும் தீரப் போகின்றன. வேலை நன்றாக இருக்க போகிறது அல்லது கிடைக்கப் போகிறது. வியாபாரம் செழிக்க போகிறது, தொழில் முன்னேறப் போகிறது. குடும்ப பிரச்சினைகள் தீரப்போகின்றன. வாழ்க்கை துணையால் இருந்த வருத்தங்கள் விலகப் போகின்றன.  

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் நன்மைகள் உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது நல்ல மாதம். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வெளிநாடு யோகம் உண்டு. நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வீரகள். ஆனால் தொழிலில் காலூன்றுவீர்கள். அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தங்கள் அனைத்தும் விலகி சகஜமான நிலைக்கு நீங்கள் வரக்கூடிய அத்தனை தன்மைகளும் இந்த அக்டோபர் மாதத்தில் இருந்து உருவாகும் என்பதே உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக இருக்கும். ஆகவே மிதுனத்திற்கு இனிமேல் கவலைகள் இல்லை, இல்லவே இல்லை.

1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் காலை 6.02 முதல் 6-ம் தேதி பகல் 8.28 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.