மகரம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு விடிவுகாலம். பிறக்கப் போகிறது. குறிப்பாக திருவோண நட்சத்திரக்காரர்கள் பட்ட அவஸ்தை அத்தனையும் தீரப்போகிறது. கடந்த மூன்று வருடங்களாக ஜென்மச்சனியின் ஆதிக்கத்தினால் மகரத்தினர் நிலைகுலைந்து போய் விட்டீர்கள். உங்களில் இளையவர்களின் பாடு மிகுந்த திண்டாட்டமாக இருந்தது.  2020 ம் ஆண்டு உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நன்றாக இல்லை.  2021 ம் ஆண்டு முதல் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் பட்ட துயரங்கள் சொல்லவே முடியாது. 2022  பிறந்ததில் இருந்தே அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் ஆதங்கத்தில் இருக்கிறீர்கள். இவர்கள் அனைவருக்குமே முன்னேற்றங்கள் வரக்கூடிய மாதமாக அக்டோபர் இருக்கும்.  


வேலை இழந்தவர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம், சொந்தத் தொழில் ஒன்றுமே இல்லை, குடும்பத்தில் நிம்மதி இல்லை, யாருமே மதிக்கவில்லை, கணவன் மனைவி இருவரும் பிரிவு, வருமானம் இல்லை, தொட்டது எதுவும் துலங்கவில்லை போன்ற குறைகளோடு இருக்கக்கூடிய மகர ராசிக்காரர்கள் அனைவருக்குமே வயதிற்கு ஏற்றார் போல நல்ல மாற்றங்கள் இனிமேல் வரப்போகிறது. பெரியவர்களுக்கு சிறியவர்களால் இனிமேல் வேதனைகள் இருக்காது. இளையவர்களுக்கு எல்லாம் இனிமேல் நன்றாக நடக்கும். குறிப்பாக கடந்த காலங்களில் தேவை இல்லாத பழக்கத்திற்கு ஆளானவர்கள் அவற்றை திருத்திக் கொள்வீர்கள். கூடா நட்புகளில் இருந்து விலகப் போகிறீர்கள். புரிந்து கொள்ளாத காதலன் காதலி இனிமேல் புரிதல்கள் வரும்.  சிலருக்கு காதல் பிரியும், சிலருக்கு சேரும். அனைத்தும் உங்கள் நன்மைக்குத்தான்.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் தற்போது பக்கத்தில் வருவார்கள். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். பிள்ளைகளால் இனி நல்ல சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். பொதுவாழ்க்கை, ஊடகம் பத்திரிக்கை துறை, கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதம். நீண்டநாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள். சிலருக்கு தந்தை வழியில் செலவுகள் உண்டு. பூர்வீகச்சொத்தில் ஏதாவது மனக் கஷ்டங்கள் வரலாம். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். எதுவும் எல்லை மீறாது. மகரம் இனிமேல் நன்றாக இருக்கும். பரம்பொருள் துணையிருப்பார். இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. இனி அனைத்தையும் சமாளிப்பீர்கள். பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது.

4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி காலை 10.30 முதல் 22-ம் தேதி இரவு 8.05 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.