துலாம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

துலாம்:

அக்டோபர் மாத பலன்களை துலாம் ராசிக்கு இரண்டு பிரிவுகளாக சொல்லலாம். மாத முற்பகுதியில் முதல் இரண்டு வாரங்கள் ராசிநாதன் சுக்கிரன் நீச்சனாக இருந்தாலும் நீச்ச பங்க அமைப்பில் குருவின் பார்வையில் இருக்கிறார். இது உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு தடைகளை கொடுத்து, மனக்குறையுடன் நீங்கள் இருக்கக்கூடிய அமைப்பு. மாதத்தின் பிற்பகுதியில் இரண்டு வாரங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சிநிலை பெறுகிறார் இது உங்களுக்கு புத்துணர்ச்சியையும் கூடுதல் செயல் திறனையும் கொடுக்கக் கூடிய நிலை. எனவே மாத பிற்பகுதியில் துலாம் ராசிக்காரர்கள் எதுவும் சாதிக்கின்ற அமைப்பு இப்போது உண்டு.


ஆறு, பன்னிரண்டாம் இடங்கள் வலுவாக இருப்பதால் பங்குச்சந்தை, யூகவணிகம், சூதாட்டம், இன்டெர்நெட் போன்றவைகளில் பணம் இழந்தவர்கள் இப்போது இழந்த பணத்தில் ஓரளவு திரும்ப கிடைக்கக்கூடிய நிலை வரும். அதேநேரம் பேராசை பெரு நஷ்டம் என்பதையும் துலாம் ராசிக்காரர்கள் மறந்து விடக்கூடாது. வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு அனுமதி கிடைக்கும். தூர இடங்களால் நன்மை உண்டு.  வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். மாதம் முழுவதும் கிழக்கு திசையிலிருந்து நல்ல செய்திகள் வரும். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு மேன்மைகள் உண்டு. சிலருக்கு வீட்டு கனவு நிறைவேறும். கடன்களால் வீடு, வாகனம் அமையும்.  எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது. ஏதேனும் ஒரு வகையில் செலவு வந்து கொண்டே இருக்கும். என்ன செய்வது போன்ற எரிச்சல் உணர்வுகள் தோன்றும். அதே நேரம் பண வரவிற்கு அக்டோபர் மாதத்தில் கண்டிப்பாக பஞ்சம் இல்லை.

பெண்களால் செலவுகள் உண்டு. ராகு சுபத்துவமாக இருப்பதால் அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் தொழிலில் உதவுவார்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்லவிதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம். வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலை மாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.  மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும்.

1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 12 -ம் தேதி இரவு 11.29 முதல் 15-ம் தேதி காலை 10.01 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.