தனுசு: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

தனுசு:

கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக எதுவும் நடக்கவில்லையே என்பது போன்ற எண்ணங்களில் இருக்கக்கூடிய தனுசு ராசிக்கார இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் ஆரம்பிக்கின்ற மாதம் இது. இந்த வருடத்துடன் உங்களை ஆட்டிப்படைத்த ஏழரைச்சனி அமைப்பு விலகப்போகிறது. வயதிற்கு ஏற்றவகையில் உங்களுக்கு என்ன தேவையோ அவைகள் அனைத்தும் அடுத்த வருடம் முதல் கிடைக்கக்கூடிய ஆரம்பங்கள் இந்த அக்டோபர் மாதத்தில் இருக்கும். வேலை, மேற்படிப்பு, தொழில், வியாபாரம், சிலருக்கு திருமணம், புத்திரபாக்கியம் போன்ற அத்தனையும் இனி நல்லபடியாக நடக்க இருக்கின்றன. எதில் நீங்கள் அதிருப்தியோடு இருந்தீர்களோ அவைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறக்கூடிய மாதமாக இதை சொல்லலாம்.


கடந்த சில வருடங்களாகவே உங்கள் அனைவருக்குமே பணம் பற்றிய புரிதல்கள் ஏற்பட்டு விட்டன. பணம் இருந்தால் நம்மை எப்படி மதிப்பார்கள், இல்லாத நிலையில் நமக்கு என்ன மரியாதை இருக்கும் என்பதை இப்போது நன்றாகவே உணர்ந்திருக்கிறீர்கள். அதைப் போலவே உறவுகளில் யார் நல்லவர், கெட்டவர், நட்புகளில் யார் கைகொடுப்பார், கை கொடுக்க மாட்டார்கள் என்பது போன்ற அத்தனையும் தற்போது உங்களுக்கு புரிய வந்து விட்டபடியால், அடுத்த சில வருடங்களை  உங்களின் எதிர்காலத்துக்கு ஏற்றபடி வடிவமைத்து கொள்வதற்கான நல்ல மாதமாக இது அமையும். எதை எதிர்பார்த்தீர்களோ  அது கிடைக்க இருக்கிறது. எது தேவையோ அது வர இருக்கிறது. உங்களுடைய முயற்சிகள் இனிமேல் பலிக்கும். ஆனால் நீங்கள் முயற்சிகள் செய்ய வேண்டும்.  பிறந்த ஜாதக அடிப்படையில் நல்ல தசா புக்திகள் நடக்காதவர்களுக்கு கூட கோட்சார நிலையில் கிரகங்கள் நல்ல அமைப்பில் இருப்பதால் பெரிய கஷ்டங்கள் எதுவும் இனிமேல் தனுசு ராசிக்காரர்களுக்கு இல்லை. தனுஷுக்கு நல்லவைகள் மட்டும் நடக்க ஆரம்பிக்கின்ற மாதமாக இது அமையும்.

கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் கடன்களும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில் நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இனி தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும். பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும். தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். அரசுவேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். மனைவிக்கு கழுத்து நகை வாங்கித் தருவீர்கள். வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களில் சிலருக்கு மறைமுகமான  வருமானங்கள் வருவதற்கு வரும்.

1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம் தேதி இரவு 10.28 முதல் 20-ம் தேதி காலை 10.30 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.