சிம்மம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

சிம்மம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் சுபத்துவமாகவே இருக்கிறார். அக்டோபர் முதல் இரண்டு வாரங்கள் அவர் சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் இருப்பது மிக யோகமான அமைப்பு. மாதத்தின் முதல் 15 நாட்களும் சிம்மத்தினருக்கு தொட்டது துலங்கும். சிம்மத்தினர் அனைவருமே வயது, இருப்பிடம், தகுதிக்கு ஏற்றார்போல நல்ல அனுபவங்களை பெறுவீர்கள். பிற்பகுதியில் ராசிநாதன் நீச்சம் அடைந்தாலும் கூட அவர் சுக்கிரனோடு இணைந்து நீச்சபங்கம் அடைவதால் அக்டோபர் மாதம் அப்படி ஒன்றும் பெரிய கவலைகளை உங்களுக்கு கொடுத்துவிடாது. பணப் பிரச்சனைகள் தீர ஆரம்பிக்கும். இளைய பருவத்தினர் வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆகப் போகிறீர்கள். முன்னேற்றங்கள் இருக்கும். நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புக்கள் தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள் கெடுபலன்கள் இருக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள்.


நீண்டநாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். மாதம் முழுவதும் நல்லபலன்கள் மட்டும்தான் இருக்கும். ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். செவ்வாய் நல்லநிலையில் இருக்கும் அடுத்த சில வாரங்களில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும்  நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இது சிக்கல் இல்லாத மாதம்தான். இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் இந்த மாதமே வெற்றி வரும் என்பது உறுதி. எனவே தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் என்றும் உங்களுக்கு சந்தோசம்தான். சிலருக்கு தூர பயணங்கள் அமையும். எட்டில் குரு இருப்பதால் பங்குச் சந்தை கை கொடுக்கும் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து நல்ல தகவல்கள் வரும். சொல்லிக் கொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள், ஆன்மிகம் சார்ந்தவர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாதம் திருப்பங்கள் உண்டு.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி காலை 11.23 முதல் 10-ம் தேதி மாலை 4.02 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.