கும்பம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அப்படி ஒன்றும் பெரிய கஷ்டங்கள் வந்துவிடாது. பணத்தை கொடுக்கக்கூடிய நிலையில் குரு இருப்பதும், மறைமுகமான வருமானங்கள் வரக்கூடிய அமைப்பில் புதன், சுக்கிரன் இருப்பதும், பணம் பற்றிய கவலைகள் இனிமேல் இருக்காது என்பதை காட்டுகிறது. அதேநேரத்தில் நேர்மையான வழிகளில் வருகின்ற பணம்தான் உங்களை சிக்கல்களில் ஆழ்த்தாது என்பதால் எதிலும் உண்மைத்தனத்தோடு கும்ப ராசிக்காரர்கள் இருக்க வேண்டிய மாதமாக அக்டோபர் இருக்கும். பொதுவாகவே கும்பத்தினர் உழைப்பை நம்புபவர்கள். எது கை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வேலை கை கொடுக்கும், தொழில் கை கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை உள்ளவர்கள்  என்பதால் குடும்ப பிரச்சினைகளை வேலை மூலம் மறக்க நினைப்பீர்கள்.


இளைய பருவத்தினர்ருக்கு இந்த மாதம் எதிர்காலத்திற்கு தேவையான அனுபவங்கள் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்து தூர இடங்கள் போவீர்கள்.  மேற்படிப்பு வேலை போன்றவைகளுக்கு உங்களில் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் போவதற்கான அனுமதிகள் கிடைக்கும். வடக்கு மற்றும் மேற்கு திசையில் லாபங்கள் கிடைக்கக் கூடிய மாதம் இது. சாப்ட்வேர் துறையில் இருக்கக் கூடியவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. பொருளாதார நிலைமை மேம்படும். கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். சுக்கிரன் வலுப் பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.

அடுத்த வருடம் முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி ஆரம்பிப்பதால் அவிட்டம் அல்லது சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சிலவிதமான வேலை, தொழில் மாற்றங்கள் இப்பொழுது ஏற்பட ஆரம்பிக்கும். நீங்களாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.  வருகின்ற மாற்றத்தை தைரியத்துடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். எதுவும் குடி முழுகிப் போய்விடாது. ஜென்மச்சனி ஆரம்பிக்கப் போகிறது என்றாலும் கூட இன்னும் சில மாதங்களுக்கு இரண்டாம் இடத்தில் குரு இருப்பதால் பொருளாதார பிரச்சனை வராது. அதேபோல இன்னும் ஒரு வருடத்திற்கு மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து நல்லபலன்களை கொடுத்துக் கொண்டிருப்பதால் எதையும் தைரியமாக சமாளிக்கக்கூடிய திறமை, உத்வேகம், செயல் திறன் போன்றவைகள் உங்களிடம் அதிகமாகவே இருக்கும் ஆகவே ஏழரைச்சனியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாம் உங்களுக்கு நன்றாகவே முடியும்.

 2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 8.06 முதல் 25-ம் தேதி அதிகாலை 2.33 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.