கன்னி: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கன்னி:

அக்டோபர் மாதம் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் தனது நண்பரான சூரியனுடன் இணைந்து உச்ச நிலையிலும், குருவின் பார்வையிலும் இருக்கிறார். மாதம் முழுவதும் புதனின் உச்ச நிலை நீடிப்பதால் கன்னி நன்மை பெறும். அக்டோபர் கன்னிக்கு நன்மைகளை தருகின்ற மாதம். இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். ராசிநாதனின் வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்போது கன்னிக்கு பொருந்தும். முன்பைவிட இப்போது ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறீர்கள். அது நீடிக்கும்.


மாத பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சி வலுவுடன் ஆட்சி வலுவுடன் கேதுவுடன் இணைந்திருப்பதால் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. சூரியன் நீச்சமாவதால் தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இதுவரை தொழில் நிலைமை சரி இல்லாமல் இருந்தவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். ராசியும், ராசிநாதனும் குருவால் சுபத்துவம் அடைந்திருப்பதால் சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடுமாற்றம் என நல்ல மாற்றங்கள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். அந்நிய இன,மத,மொழிக்காரர்கள் உதவுவார்கள். நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு. வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது நல்ல நேரம். இந்த மாதம் முதல் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம்.

2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும்.10-ம்தேதி பகல் 4.02 முதல் 12-ம் தேதி இரவு 11.29 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.