கடகம்: 2022 அக்டோபர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கடகம்:

மாதம் முழுவதும் குருபகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து ராசியை பார்த்துக் கொண்டிருப்பது எந்த கஷ்டங்கள் வந்தாலும் கடக ராசிக்காரர்கள் அதை உறுதியோடு சமாளிப்பீர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்ற ஒரு நல்ல அமைப்பு. ராஜயோகாதிபதியான செவ்வாயும் லாப ஸ்தானத்தில் இருப்பது வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகளில் கஷ்டங்கள் எதுவும் வந்துவிடாது என்பதைக் காட்டுகிறது. கடக ராசிக்கு பணத்தை கொடுப்பவரான சூரியன் மாதத்தின் முதற்பகுதியில் குருவின் பார்வையிலும், பிற்பகுதியில் நீச்சமாக இருந்தாலும் கூட, சுக்கிரனோடு இணைந்து நீச்சபங்க அமைப்பிலும் இருப்பதால் இந்த மாதம் பண வரவிற்கும் அப்படி ஒன்றும் கஷ்டங்கள் இருக்காது. அதே நேரத்தில் பிற்பகுதி இரண்டு வாரங்கள் நீங்கள் எதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரங்களாக இருக்கும்.


மாத இறுதியில் ஆறாம் இடம் வலுப்பெறுவதால் உங்களில் சிலருக்கு கடன் கவலைகள் மீண்டும் தலை தூக்கக்கூடிய நிகழ்வுகள் உண்டு. கிரெடிட் கார்டு, செக் ரிட்டன் போன்ற வழக்குகளில் மாட்டி கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான திருப்பங்கள் இருக்கும்.  இதுவரை மோதிக் கொண்டிருந்தவர்களோடு சமரசம் ஆக முயற்சிப்பீர்கள். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து விடுவது எவ்வளவோ நல்லது என்பது போன்ற எண்ணங்கள் இப்போது வரும். இளையவர்களுக்கு மாற்றங்கள் இருக்க கூடிய மாதம் இது. வேலை மாற்றத்தை நீங்களாக செய்யாதீர்கள். எவரையும் நம்பி தொழில் ஆரம்பித்து விடாதீர்கள். முக்கியமாக இளைய பருவத்தினர் இப்போது காதலில் சிக்கிக் கொள்ளக்கூடாது. தெளிவாக முடிவெடுங்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும்.  

வரப்போகின்ற இரண்டு வருடங்கள் பணம், நட்பு, உறவு போன்றவைகளில் சில புரிதல்களை கொடுக்க வேண்டுமென்பதால், இப்போது தொழில் எண்ணங்கள் சிலருக்கு வரலாம். சிலருக்கு புதியவர்கள் அறிமுகமாகலாம். இதெல்லாம் இப்போது சரிவராது. இவைகள் அனைத்திலும் மனதை செலுத்தாமல் கடக ராசிக்காரர்கள் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறை கொள்ள வேண்டிய மாதம் இது. தனாதிபதி சூரியன் நீச்சபங்க அமைப்பில் இருப்பதால் தேவைப்படும் நேரத்தில் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு ஜாலியான அனுபவங்கள் இருக்கும். படிப்பைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்வீர்கள். குடும்பத்துப் பிரச்னைகளில் பொறுத்துப் போவதன் மூலம் பிரச்னை இருக்காது என்பதால் பொறுமை காட்டுங்கள். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். சிலருக்கு கடல் தாண்டிப் போகும் பயணங்கள் இருக்கும். என்னதான் இருந்தாலும் குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் எதையும் இப்போது கடகத்தினர் சமாளிப்பீர்கள்.

1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 6 -ம் தேதி காலை 8.28 முதல் 8 -ம் தேதி காலை 11.23 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.