குருஜியின் வார ராசிபலன்கள் (05-09-2022 முதல் 11-09-2022 வரை)

#astrologeradityagurujivararasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மேஷத்தினரை எரிச்சலூட்டிக் கொண்டிருந்த சம்பவங்களும், நேற்றுவரை நீங்கள் வெறுப்படையும்படி நடந்து கொண்டிருந்தவர்களும் உங்களை விட்டு விலகும் வாரம் இது. குறிப்பாக சகோதர, சகோதரி விஷயங்களில் சங்கடங்களை அனுபவித்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தாமதித்து வந்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் இருக்கும். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் அமையும். தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் உண்டு மேன்மையான வாரம் இது..


சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்கும். சிலருக்கு சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும் என்பதை கிரகநிலைகள் காட்டுகின்றன. இரண்டில் உள்ள செவ்வாயால் பெண்களால் செலவுகள் இருக்கும். மகள் சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். பணம் வருவதற்கு பொய் சொல்ல வேண்டி இருக்கும். மேஷத்தினர் பேசி சம்பாதிக்கும் வாரம் இது.  

ரிஷபம்:

கிரக அமைப்புகள் ரிஷப ராசிக்கு வலுவான நிலைகளில் இருப்பதால் இது உங்களுக்கு நல்ல வாரம். ரிஷபத்திற்கு இப்போது நல்ல மாற்றங்கள் வரும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். வாரம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய பருவத்தினருக்கு எதிர்கால நன்மைகளுக்கான அடித்தளம் இப்போது உண்டு. பெண்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும் அலுவலகங்களில் நல்ல பலன்கள் நடக்கும்.

சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில்  தனவரவுகளும் வருமானமும் இருக்கும். குறிப்பாக ரியல்எஸ்டேட், பில்டர்கள் போன்றோருக்கு ஒரு பெரிய தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 9,11, ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ந்தேதி இரவு 9.43 மணி முதல் 6-ந்தேதி இரவு 11.38 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் பெரிய சங்கடங்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் ஆரம்பங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:

மனதில் இருக்கும் எண்ணங்கள் செயலாக மாறி வெற்றியையும், உற்சாகத்தையும் தரும் வாரம் இது. ராசிநாதன் உச்சமாக இருப்பதோடு குருவின் பார்வையிலும் இருக்கிறார். குறிப்பிட்ட சில மிதுனத்தினருக்கு இருந்து வந்த மந்தமான தொழில் நிலைமைகளும், எதிலும் முடிவெடுக்க முடியாமல் தள்ளி வைத்துக் கொண்டே வந்தவைகளும் இனி முடிவுக்கு வந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணி புரியும் இடங்களில் பாராட்டுக்களும் சம்பள உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உண்மை நிலை புரிந்து நண்பராக மாறுவார்கள்.

பணவரவு நன்றாக இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்கள் இருக்கும். 10,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ந்தேதி இரவு 11.38 மணி முதல் 9-ந்தேதி அதிகாலை 12.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

கடகம்:

வேலை தொழில் விஷயங்களில் இப்போதிருந்தே கடக ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது நல்லது. இளையவர்கள் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது செய்ய வேண்டாம். அகலக்கால் வைக்க வேண்டாம். நல்ல வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

கடகத்திற்கு இப்போது குறுக்குவழி சிந்தனைகள்  வேண்டாம். வரப் போகின்ற இரண்டு ஆண்டு காலங்களில் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். யாரையும் நம்ப வேண்டாம். பணம் கொடுத்து உறவுகளையும் நட்புகளையும் பகையாக்கிக் கொள்வீர்கள் என்பதால் கடன் விஷயத்திலும் கவனமாக இருங்கள். 9-ந்தேதி அதிகாலை 12.39 மணி முதல் 11-ந்தேதி அதிகாலை 2.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியனும், தனாதிபதி புதனும் வலுவாக உள்ள நல்ல வாரம் இது. சூரியன் ஆட்சியாக இருப்பது தைரியம் தரும் என்பதாலும், புதனின் உச்ச நிலையால் தன ,லாப ஸ்தானம் வலுவாவதாலும் சிம்ம ராசிக்காரர்களின் பண விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும் வாரம் இது. சிம்மத்தினர் ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள்.

ராசிநாதன் வலுவுடன் இருப்பதால் சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. அதிகமுயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் எல்லா வேலைகளையும் முடிப்பீர்கள். சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள்.  ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள் லாபங்களை அடைவீர்கள். அதேநேரம் செலவுகள் நிறைந்த வாரமாக இது இருக்கும். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால்  நன்மைகள் உண்டு.

கன்னி:

ராசிநாதன் புதன் ராசியிலேயே உச்சநிலை பெற்று குருவின் பார்வையிலும் இருப்பதால் உங்களில் இளைய பருவத்தினருக்கு இனி நல்ல மாற்றங்கள் ஆரம்பிக்கிறது. தொழிலில் நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு பொருளாதார மேன்மை ஏற்படும் வாரம் இது. கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசுவாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.  அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் மிகவும் நல்லபலன்கள் உண்டு. நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும்

சிலருக்கு சொந்த வாழ்க்கையிலும் வாழ்க்கைத் துணை விஷயத்திலும் நெருடல்கள் இருக்கலாம். நடுத்தர வயதினர் மேன்மை பெறுவீர்கள். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். திருமணம் தடங்கலானவர்களின் திருமணம் கூடி வரும்.

துலாம்:

ராசியை செவ்வாய் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ராசிநாதன் சுக்கிரன் நீச்ச நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாலும், அவருடைய எதிரியான சூரியனுடன் இருப்பதாலும் இந்த வாரம் முணுக்கென்றவுடன் துலாம்  ராசிக்காரர்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்து யாரையும் ஒரு சுடுசொல் சொல்வதோடு, பகைத்துக் கொண்டு சண்டை போட ஆரம்பிப்பீர்கள். இன்னும் சில வாரங்களுக்கு நீங்கள் கோபத்தை தள்ளி வைக்க வேண்டிய வாரம் இது. அதேநேரம் இந்த வாரம் பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நிறைவேறும்.

குரு ஆறில் இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். இருக்கும் வேலையிலிருந்து மாறுவதிலும் கவனம் வேண்டும். தொழில் நன்றாக நடந்தாலும் பண வரவைச் சனி தடுப்பார் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசு ஊழியர்கள் மேல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். பெண்களுக்கு குறைகள் இல்லை.

விருச்சிகம்:

விருச்சிகத்திற்கு ஒரு விசேஷபலனாக இந்த வாரம் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது நடக்கும். எட்டுக்குடைய புதன் உச்சமாக இருப்பதால் ஒருவர் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விருச்சிகத்தினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் இனி வேறுவிதமான வடிவங்களைப் பெறும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை சுலபமாக சமாளிப்பீர்கள்.-

பணவரவில் கெடுதல்கள் எதுவும் இல்லை. சிலருக்கு டிரான்ஸ்பர், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும். எதையும் சமாளிக்க முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். பெரிய குறைகள் எதுவும் இல்லாத வாரம் இது

தனுசு:

இதுவரை செட்டில் ஆகாத தனுசு ராசியினர் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் வாரம் இது. யோகாதிபதி சூரியன் ஆட்சி வலுவில் உள்ளதால் இது நன்மைகள் மட்டுமே உள்ள வாரமாக இருக்கும். வார ஆரம்பத்தில் சில தடைகள் இருக்கும் என்றாலும் குருவின் வீட்டில் இருக்கும் சந்திரனால் மனோதைரியம் கூடுதலாகி தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வழக்கு காவல்நிலையம் என அலைந்து கொண்டிருப்பவர்கள் சாதகமான திருப்பங்களை காண்பீர்கள். தீர்ப்பு சாதகமாக அமையும்.

பெண்களால் லாபம் உண்டு. சிலருக்கு மூத்த சகோதரி உதவுவார். உங்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும்  தனியொருவராகவே சமாளிப்பீர்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும். 

மகரம்:

ஜென்மச் சனியின் காரணமாக கடந்த காலங்களில் சிரிக்க மறந்து, துன்பங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த மகரத்தினர், இனிமேல் நன்மைகள் நடப்பதைக் காண ஆரம்பிப்பீர்கள். உங்களில் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்களிடமும், குடிப்  பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மகரத்தில் பிறந்து கடந்த இரண்டு வருடங்களாக சோதனைகளை அனுபவிக்காத உங்களில் சிலர் பாக்கியவான்கள்.  மகரத்திற்கு இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும்  இருக்கும்.

இதுவரை தடங்கலாகி வந்த விஷயங்கள் இனி எண்ணம் போல் நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இனி நல்ல வருமானம் இருக்கும். வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் அது நீங்கி அலுவலகங்களில் நல்ல சூழல் அமையப் பெறுவீர்கள்.

கும்பம்:

ஆறாமிடம் குருவின் பார்வையில் இருப்பதாலும் எட்டில் புதன் உச்சம் ஆகி அவரையும் குரு பார்ப்பதாலும், இந்த வாரம் கும்பத்திற்கு வீண் விரோதங்களும், செலவுகளும் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும் புதன் உச்சம் பெறுவதால் தொழில் ரீதியான வருமானங்கள் வந்து அதை சரிக்கட்டும். வாரம் முழுவதும் சந்திரன் சாதகமான அமைப்பில் இருப்பதால் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக அமையும். சொத்தில் வில்லங்கம் இருந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும். உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள்.  

சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். நல்லவாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் வழியில் நன்மைகள் நடக்கும். முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் உண்டு. பெண் குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. உயர் கல்வி படிக்க இருந்து வந்த தடை நீங்கும். குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது பொறுத்துப் போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம்.

மீனம்:

மீனத்திற்கு சாதகமற்ற அமைப்புகள் விலகி, தடைகள் நீங்கும் வாரம் இது. இதுவரை மனதிற்கு பிடிக்காத ஒரு செயலை நிர்ப்பந்தத்தின் பெயரில் செய்து கொண்டிருந்தவர்கள் இனிமேல் சுயமாக முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். அடுத்த வாரம் முதல் எதிரியான சுக்கிரன் நீச்ச நிலை அடையப் போவதும், ராசிநாதன் குரு ராசியிலேயே ஆட்சி நிலையில் இருப்பதும் இனிமேல் நண்பர்களால் நன்மைகளும், பொருளாதார லாபங்களும் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது. சூரிய வலுவால் குறிப்பிட்ட சிலருக்கு தந்தை வழி நன்மைகளும் உண்டு.

நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த இளைஞர்கள் சிலருக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன்  வேலை கிடைக்கும். முதல் வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் தடைகளையும், எதிர்மறை விஷயங்களையும் சந்தித்து கொண்டிருந்தவர்களின்  தொழில் சிறக்கும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்