கும்பம்: 2022-செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் சனி பன்னிரண்டாம் வீட்டில் விரைய சனியாக இருந்தாலும் கூட, பணத்தை கொடுக்கக்கூடிய நிலையில் இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால், வருகின்ற வருமானத்தின் மூலம் அனைத்தையும் சமாளிக்கின்ற மாதமாக இது இருக்கும். செலவுகள் கூடுதலாகவே இருக்கும். ஆயினும் ஏதோ ஒரு வழியில் கையில் பணம் இருந்து கொண்டே இருக்க கூடிய மாதமிது. பத்தாம் வீட்டை அதன் அதிபதியான செவ்வாயும், குருவும் பார்ப்பதால் தொழில் நன்றாகவே இருக்கும். ஆனால் குறைந்த அளவே லாபம் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடப்பதைப் போலத்தான் தெரியும். ஆனால் பணத்தை காணோமே என்று கல்லாவில் தேடுவீர்கள்.  

இளைய பருவத்தினருக்கு ஒரு விதமான விரக்தி இருக்கும். என்ன முயற்சி செய்தாலும் அது சரியான நேரத்தில் பலன் தரவில்லையே என்பது போன்ற எண்ணங்களில் இப்போது பெரும்பாலான கும்ப ராசிக்கார இளையவர்கள் இருப்பீர்கள். அடுத்த வருடம் ஜென்ம சனி ஆரம்பிக்க இருப்பதால் இளையவர்களுக்கு ஒரு முக்கியமான ஜோதிட அறிவுரையாக புதிய தொழில் எதுவும் இப்போது ஆரம்பிக்க வேண்டாம். பெரிய முதலீட்டில் எதையும் செய்யாதீர்கள். உங்களுடைய அறிவை மட்டுமே மூலதனமாக வைத்து செய்யக்கூடிய எதையும் செய்யலாம். முக்கியமாக காதல் என்பது வேண்டவே வேண்டாம். உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தில் சனி அடுத்த வருடம் போகும் பொழுது மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால் எதிர்பாலினத்தவரை புரிய வைக்கக்கூடிய சில அறிமுகங்கள் இப்போது உங்களுக்கு நடக்க ஆரம்பிக்கும்.  

பண விஷயத்தில் கவனமாக இருங்கள். யாரையும் எதற்கும் நம்ப வேண்டாம். வானத்தை வில்லாக வளைக்கிறேன் என்று சொல்பவரின் அருகிலேயே போகாதீர்கள். உறவுகளை நம்ப வேண்டாம். நட்புகளை புரிய வைக்கக்கூடிய காலகட்டம் அடுத்த வருடம் ஆரம்பமாக இருக்கிறது. இப்போது அறிமுகம் ஆகிறவரிடம் மிகவும் கவனமாக இருங்கள்.  இந்த மூன்று அல்லது நான்கு மாத காலத்தில் வரப்போகிறவர்தான் உங்களுடைய வாழ்க்கையில் சில கெட்ட புரிதல்களை கொடுக்கக் கூடியவராக இருப்பார். வெளிநாடு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் போய் வேலை செய்ய வேண்டியிருக்கும். தூர இடங்களில் இருப்பவர்கள் இப்போது வேலையை விட்டு விட வேண்டாம். வேலை, தொழில் விஷயத்தில் கவனமாக யோசித்து முடிவு எடுங்கள். இப்போது பண விஷயத்தில் வரக்கூடிய அனுபவங்கள் எதிர்காலத்தில் உங்களை பட்டை தீட்டும் என்பதால் அப்படி ஒன்றும் எதுவும் கும்பத்திற்கு குடி முழுகிப் போய்விடாது.

2,4,6,8,9,10,17,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ந்தேதி காலை 11.22 மணி முதல் 27-ந்தேதி மாலை 6.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.