சிம்மம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

#astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

சிம்மம்:

மாத முற்பகுதியில் சூரியன் பனிரெண்டில் மறைந்து சனியின் பார்வையில் இருந்தாலும் அவர் குருவின் பார்வையில் இருப்பதால் கண்டிப்பாக எந்தவிதமான பாதகங்களோ அல்லது அசுபச்செலவுகளோ இப்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு இருக்காது. பிற்பகுதியில் சூரியன் சனியின் பார்வையில் இருந்து விலகி ராசியிலேயே ஆட்சி பெறுகின்ற மிக நல்ல நிலைமையை அடைகிறார். ஆகவே இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் சற்று சுணக்கமான நிலை இருந்தாலும் கூட கடைசி இரண்டு வாரங்கள் நல்லவைகளை சிம்மத்தினர் அடைவீர்கள். தொட்டது துலங்குகின்ற மாதம் இது. கெளரவம், அந்தஸ்து கூடக் கூடிய மற்றும் பெரியவர்களிடம் நல்ல பெயர் எடுக்க கூடிய சம்பவங்கள் நடக்கும்.


திறமைகள் இருந்தும் அதை நிரூபிக்க சந்தர்ப்பம் இல்லாதவர்களுக்கு வாய்ப்புகள் கையில் வந்து விழுகின்ற நல்ல மாதம் இது. எட்டில் குரு மறைந்திருப்பதால் சிலருக்கு பாஸ்போர்ட், விசா போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி வெளிநாடு, வெளிமாநிலம் போவதற்கான அனுமதி கிடைக்கும். அலுவலகத்தில் எல்லோரையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள், ஆனால் எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது என்பது போன்ற கவலைகள் உள்ள சிம்மத்தினருக்கு  இப்பொழுது அனுமதி கிடைத்து வெளிநாடு போகக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு இது நல்லமாதம். சமீபகாலத்தில் யூக  வணிகமான பங்குச் சந்தையில் பொருள் நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு இந்த மாதம் முதல் விரையங்கள் விலகும். சிம்மத்தினர் புத்துணர்ச்சி பெறும் மாதம் இது.

சுபக்கிரகம் எட்டாமிடத்தை வலுப்படுத்தினால் அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் என்பதால் எட்டாமிட குருவால் புதையல் லாட்டரி போன்ற திடீர் பணலாபம் ஒன்றும் இந்த மாதம் உண்டு. இளைய பருவத்தினருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்திருந்தவர்கள், வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பூர்வீகச் சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது. மாத பிற்பகுதியில் யோகாதிபதி செவ்வாய் பத்தாம் இடத்திற்கு மாறுவதும் சிம்மத்திற்கு ஒரு நல்ல மாற்றம்தான். இதுவரை வியாபாரம் சரியில்லாமல் இருந்தவர்கள், தங்களுடைய துறைகளில் சாதிக்க மு,டியாமல் இருந்தவர்கள் அனைவருக்குமே அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

1,2,4,5,6,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 14-ம் தேதி மதியம்  4.15 மணி முதல் 16-ம் தேதி இரவு 9.06 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.