மகரம்: 2022 ஜூலை மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மகரம்:

ஜென்மச்சனியில் இறுதிப்பகுதிக்கு வந்து விட்டதால் இனிமேல் மகர ராசிக்கு கொடுமையான பலன்களைத் தராமல் சனி இரக்கம் காட்டுவார். சோதனைகள் விலகிக் கொண்டிருக்கும் மாதம் இது. குறிப்பாக திருவோணம் நட்சத்திரக்காரர்களின் மன அழுத்தங்கள் நீங்கும். உங்களுக்கு நல்லவை நடக்கப் போகிறது என்று ராசிபலனில் நான் எழுதிக் கொண்டிருந்தாலும் இந்த மாதம் முதல் நல்ல திருப்பங்கள் வருவதை உங்களில் சிலர் உணருவீர்கள். சிலர் ஏற்கனவே பிரச்னைகள் தீர ஆரம்பித்திருப்பதை உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இளைய பருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக வேலையைத் துவங்கி விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். ஆக்டிவாக இருங்கள்.

மகர ராசியின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் இந்த மாதம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இந்த மாதம் நீங்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். வாடகை கொடுக்க முடியும். பாதிக்கப்பட்ட அனைத்திலிருந்தும் இனி மீண்டு வருவீர்கள். தொழில், வியாபாரம் போன்றவைகள் இனி நன்றாக நடக்கும். பணப்பயிர் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு. இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் மாதம் இது. உங்களில் சிலருக்கு வேலை தொழிலில் இந்த மாதம் சாதகமான பலன்கள் இருக்கும். சிலருக்கு எதிர்காலத்தில் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த மாதம் நிர்ணயிக்கும்.

1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். மாதஆரம்பதில் 03-ம்தேதி காலை 6.30 மணி முதல் 05 -ம்தேதி மாலை 4.52 மணி வரையும், மாதக்கடைசியில் 30-ம் தேதி மதியம் 12.12 முதல் 01-ம் தேதி இரவு 10.29 சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.