கும்பம்:2022 ஜூன் மாத ராசி பலன்கள்

#adityagurujimonthlyrasipalan


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கும்பம்:

ராசிநாதன் சனி ராசியிலேயே இருக்கும் மாதம் இது. இது அதிசாரம் தான் என்றாலும் கூட ஜென்மச் சனியின் ஆதிக்கம் இனிமேல் உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும். அதே நேரம் இரண்டில் குரு இருப்பதால் பண விஷயத்தில் உங்களுக்கு நல்லவைகள் நடக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச் செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும். செலவுகளை கடன் வாங்காமல் செய்வதற்கான வருமானங்களும் உண்டு. மாத பிற்பகுதி முழுவதும் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவிகள் கிடைத்தலும்,  உங்களில் சிலருக்கு ஆரோக்கியம்  திரும்ப கிடைத்தலும் நடக்கும்.


மாத முற்பகுதியில் யோகாதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருப்பது நல்ல நிலை அல்ல. ஆறாமிடமும் குருவின் பார்வையில் இருக்கிறது. ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. அதேநேரம் குருவின் தயவால் தாராளமான பணவரவு  இருக்கும். அதைவைத்து எதையும் சமாளிப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.

இரண்டில் குரு வலுப்பெறுவதால் குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். வியாபாரிகளுக்கு இனிமேல் லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை  பெறுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் சோதனைகள் இல்லாத மாதமே. மொத்த வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்கு மன அழுத்தம் நீங்கும்.  எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கூடுமானவரை அனைத்தையும் உங்களின் மேற்பார்வையில் நேரிடையாகச் செய்வது நல்லது. குறிப்பிட்ட ஒரு பலனாக இதுவரை பூர்வீக சொத்து விஷயத்தில் பங்காளித் தகராறு உள்ளவர்கள் சமரசத்திற்கான ஆரம்பங்களை இப்போது செய்வீர்கள். நிலப்பிரச்னைகள் தீரும் மாதம் இது. பெண்களால் வரும் சங்கடத்தை இளைய பருவத்தினார் நன்றாக சமாளிப்பீர்கள். இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் கிரகநிலைகள் மூலம் மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு மட்டும் அனைத்திலும் நெருக்கடிகள் இருக்கும். அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். வயதான பெற்றோரை கொண்டவர்கள் அவர்களுடைய உடல்நலத்தில் கவனம் வைக்கவும். சிறு பிரச்னை இருந்தாலும் அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

2,5,7,8,9,10,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி காலை 10.04 முதல் 10-ம்தேதி மாலை 4.07 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.