கும்பம்: 2021 செப்டம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

கும்பம்:

மாத முற்பதியில் யோகாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்து நீச்சமாகவும் இருப்பதால் இந்த மாதம் சில விஷயங்கள் உங்கள் கையை மீறி நடக்கும்.  ஆனாலும் சுக்கிரன் நீச்ச பங்க வலு பெறுவதால் அனைத்தும் முடிவில் உங்களுக்கு நன்மையாக முடியும். பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சி பெறுவதாலும், ராசிநாதன் சனி, குருவின் இணைவால் சுபத்துவம் அடைவதாலும் கும்பத்திற்கு இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. சுக்கிரனின் வலுக்குறைவால் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகி போவதற்கு வாய்ப்பு இருப்பதால் எங்கும், எதிலும் நிதானத்துடன் இருங்கள்.


ராசிநாதனே பனிரென்டுக்குடையவனும் ஆவதால் கும்ப ராசிக்காரர்களைக் கெடுப்பதற்கு வெளியில் இருந்து ஆள் வரவேண்டாம். உங்களுக்கு நீங்களேதான் எதிரியாக இருப்பீர்கள். நல்ல சந்தர்ப்பங்களில் நீங்களே ஏதாவது தவறாக முடிவெடுத்து வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள். செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் பிள்ளைகளால் செலவுகளும், பிற்பகுதியில் அவர்கள் மூலம் நன்மைகளும் இருக்கும். கலைத்துறையினருக்கு சற்று சுணக்கமான மாதம்தான் என்றாலும், உங்களுடைய கடின உழைப்பு என்றுமே வீண் போகாது. அரசுத் துறையினர் இந்த மாதம் நல்ல திருப்புமுனைகளைச் சந்திப்பீர்கள்.கடந்த சில வாரங்களாக ஏழிலும், இப்போது எட்டிலும் இருக்கும் செவ்வாய் கணவன்-மனைவி இடையே கருத்து வேற்றுமைகளையும், குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்னைகளையும் செய்து கொண்டு இருக்கிறார். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். மனைவி பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. உங்கள் கௌரவமும் பாழாகாது. குடும்பத்தில் திருமணம், கிரகப் பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். சாப்ட்வேர் துறையினர் புகழ் பெறுவார்கள். பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். இளைஞர்களுக்கு பெண் சினேகிதிகள் மூலம் உல்லாச அனுபவங்கள் உண்டு.

3,4,5,8,9,17,18,19,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ந்தேதி இரவு 10.49 மணி முதல் 10-ந்தேதி அதிகாலை 1.44 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும் சண்டையோ, வீண் வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.