adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 267 (17.12.2019)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

வி. ராமன், பெசன்ட் நகர்.

கேள்வி:

கடவுள் நம்பிக்கை, ஜாதகம், மூடப்பழக்க வழக்க சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத நான், தங்களின் மாலைமலர் தொடர் கட்டுரைகள் மற்றும் தங்களின் மிக சாதுர்யமும் நம்பிக்கையும் கொண்ட கேள்வி-பதில்களைப் படித்த பிறகு ஜோதிடத்தைப் பற்றிய எண்ணம் மாறி, தங்களின் ஞானம் அளவிடமுடியாத அபாரமானது என்று உணர்ந்து உங்களின் ஆத்மார்த்த ரசிகனாக மாறினேன்.


இப்பெண்ணின் தாய், ஏற்கனவே திருமணமான உறவினரால் ஏமாற்றப்பட்டவள்.  அதன் வெகுமதிதான் இக்குழந்தை. ஏமாற்றியவனின் உண்மையான பெயர் கூடத் தெரியாமல் பிரசவத்தின் போது அவனை நண்பர்கள் கூப்பிடும் புனைப்பெயரை மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். ஆறுமாத கர்ப்பிணிப் பெண்ணான இவளது தாயை விட்டுவிட்டு அவன் ஓடிவிட்டான். பின்னாளில் இறந்தும் விட்டான். 2009ல் குழந்தையுடனான இவளது தாயை சட்டப்படி நான் திருமணம் செய்து கொண்டேன். இவளது தாய் உடல், மனம் இரண்டிலும் ஆரோக்கியமற்றவர்.

காவல்துறையில் பணி செய்து ஒய்வு பெற்ற நான், விதிவசத்தால் இவர்களிடம் மாட்டிக் கொண்டு, எப்படி இவர்களிடம் இருந்து விடுதலையாவது என்று நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இப்பெண்ணின் தாயுடன் இணைந்த பிறகு எல்லா செல்வங்களையும் இழந்ததுடன், மிகவும் துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகிறேன். இருப்பினும் இந்தப் பெண் குழந்தையை நல்ல வாழ்க்கையில் அமர்த்த வேண்டும் என்பது எனது ஆவல். எனவே இக் குழந்தையின் எதிர்காலம் பற்றிய ஜாதக குறிப்பினை வழங்கி உதவுமாறு தங்களின் பாதம் பணிந்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(விருச்சிக லக்னம், கன்னி ராசி, 2ல் செவ், 4ல் சூரி, புத, சுக், 6ல் ராகு, 8ல் சனி, 11ல் சந், குரு, 12ல் கேது 27-2-2005 அதிகாலை 1-30 சென்னை)

கடுமையான பாபத்துவம் பெற்ற செவ்வாய், நான்காம் அதிபதியையும் ஒன்பதாம் இடத்தையும் பார்த்து, தாய்-தந்தை அமைப்புகள் பலவீனமான ஒரு ஜாதகம். ஆயினும் ஜீவன ஸ்தானமும், பத்தாம் அதிபதியுமான சூரியனும், சிம்மமும் வலுவாக இருப்பதால் நிரந்தர அரசு உத்தியோகம் இப்பெண்ணிற்கு கிடைக்கும்.

வாழ்க்கையின் மத்திம பருவமான முப்பது வயதுகளில் வரும் குருதசை மிகப்பெரிய யோக அமைப்பைத் தரும் என்பதால் இக்குழந்தை படித்து, அரசு வேலையில், குறிப்பாக உங்களைப் போலவே காவல்துறை சம்பந்தப்பட்ட பணிபுரிவார். எதிர்காலத்தில் சிறப்பாகவே இருக்கக்கூடிய ஜாதகம் என்பதால், நீங்கள் கவலைப்படும் அளவிற்கு குழந்தையின் எதிர்காலம் அமையாமல் நன்றாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.

எம். வெங்கடேஸ்வரன், திண்டுக்கல்.


கேள்வி:

குருவிற்கு வணக்கம். சமீபத்தில் திண்டுக்கல் சின்னராஜ் ஐயா அவர்களுடனான கலந்துரையாடலில், பல கிரகங்கள் நீச்சமான ஜாதக அமைப்பை பற்றி கூறியிருந்தீர்கள். என் மகள் ஜாதகத்தில் 4 கிரகங்கள் நீச்சம் ஆகியிருக்கின்றன. அடிக்கடி சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாகவோ அல்லது லக்ன கேந்திரங்களில் அமைந்தாலோ அது யோக ஜாதகம் என்றும் கூறியிருக்கிறீர்கள். அது தேய்பிறை நிலையிலும் கூடவா அல்லது வளர்பிறையில் மட்டும்தானா? தயவுசெய்து என் மகள் ஜாதகத்தை பற்றி விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(கன்னி லக்னம் துலாம் ராசி , ஒன்றில் புதன் சுக்கிரன் சனி , இரண்டில் சூரியன் சந்திரன், 5ல் குரு ராகு, பதினொன்றில் செவ்வாய் கேது ,19 10 2009 அதிகாலை 4 30 திண்டுக்கல்).

உங்கள் மகளது ஜாதகம் சற்று சூட்சுமமானது,ஆழமான ஜோதிட அறிவுடன் கணிக்க வேண்டியது,மேம்போக்காக பார்க்கையில் இது ஒரு யோகமற்ற ஜாதகமாக தெரிந்தாலும்,நுணுக்கமாகப் பார்க்கும் போது மட்டுமே இந்த ஜாதகத்தின் சிறப்பை விவரிக்க முடியும்மகள் ஜாதகத்தில் உள்ள ஒரு முக்கிய நிலையாக, நான் அடிக்கடி சொல்லும் நண்பர்கள் தங்களுக்குள் கேந்திர, கோணங்களாகவும், எதிரிகள் தங்களுக்குள் கேந்திர, கோணங்களாகவும் இருக்க வேண்டும் என்கின்ற அமைப்பு இருக்கிறது. அதாவது நண்பர்களான சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகியோர்

தங்களுக்குள் கேந்திரங்களில் இருக்கிறார்கள். இவர்களின் எதிர்நிலை நண்பர்களான புதன், சுக்கிரன், சனி ஆகிய மூவரும் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் அதாவது மூவரும் இணைந்திருக்கிறார்கள். குருவின் பார்வையத் தவிர இவர்களுக்கும், அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது ஒரு மிகச் சிறப்பான அமைப்பு.

ஜோதிடத்தில் மிக ஒரு முக்கிய விதியாக, நீச்சபங்க நிலைக்கு நீச்சனை நீச்சன் பார்ப்பது உச்சனாக அதாவது நீச்சத்திற்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது அனுபவத்திலும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்க்குமாயின் இருவரும் இழந்த வலுவினைத் திரும்பப் பெறுவார்கள் என்பது விதி.

மகள் ஜாதகத்தில் குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் நீச்சம் அடைந்திருக்கின்றன. இங்கே நீச்ச சுக்கிரனை நீச்ச குரு பார்க்கிறார். இது சுக்கிரனை நீச்ச பங்கப் படுத்தும். அந்த குருவை நீச்ச செவ்வாய் பார்ப்பதும், பதிலுக்கு நீச்ச செவ்வாயை குரு பார்ப்பதும் இருவரையும் வலுப்படுத்தும். அதேபோல நீச்ச சூரியனை, நீச்ச செவ்வாய் நான்காம் பார்வையாகப் பார்ப்பதால் சூரியனும் பங்கம் பெறுகிறார். தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் நீச்ச பார்வையால் இந்த நான்கு கிரகங்களும் பலம் பெறுகிறார்கள்.

அதைவிட மேலாக மகளது 28 வயது முதல் சனி, புதன், சுக்கிரன் என யோக தசைகள் வரிசையாக வருவதும் மேன்மை. மகளது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. லக்னாதிபதி புதனாகி உச்சம் பெற்றதால் மகள் சிறப்பாகவே படிப்பாள். 28 வயதிற்கு பிறகு ஆரம்பிக்கும் சுக்கிரனுடன் இணைந்து, குருவின் பார்வை பெற்று, வீடு கொடுத்தவன் உச்சமாகி, சுபத்துவம் பெற்ற சனி தசையில் மிகவும் நன்றாக இருக்க கூடிய ஜாதகம் மகளுடையது.

வளர்பிறை என்றாலும், தேய்பிறையாக இருந்தாலும், சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாக இருப்பது ஒரு நல்ல யோகமே. அவர்கள் லக்ன கேந்திரங்களிலும் இருந்தால் சூரிய, சந்திர தசைகளில் இந்த யோகம் சிறப்பான பலன் தரும். சூரிய, சந்திரர்களின் ஒளித்திறனைப் பொருத்து இந்த யோகம் செயல்படும். மகளின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.

(17.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.