adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 186 (08.05.18)

ஜே.சுதர்சன்குமார், செங்கல்பட்டு.

கேள்வி :

9, 10 வருடங்களாக கடன் எனும் புதைகுழியில் சிக்கி வாழ்வு சீரழிந்து சின்னாபின்னமாகி, வாழ்க்கையின் ஓரத்தில் இருந்தே விலகி நின்று விட்டது. 20 லட்சம் கடனுக்கு மாதாமாதம் வட்டி கட்டவே 60 ஆயிரம் தேவைப்படுகிறது. மைனசில் இருந்து ஜீரோவுக்கே வர முடியவில்லை. அதனால் பிளஸ் (முன்னேற்றம்) பற்றி சிந்திக்கவே முடியவில்லை. மிகவும் தாழ்ந்து விட்டதால் உறவினர், நண்பர்கள் விலகி நிற்கிறார்கள். சந்தித்து வரும் அவமானம், கேவலம், புறக்கணிப்பு, ஏளனம், ஏராளம். கடனில் இருந்து மீள முடியுமா? தேவைக்கேற்ப வருமானம் உயருமா? அம்மாவுடைய பென்ஷன் உள்ளிட்ட செட்டில்மெண்ட் பணம் அனைத்தையும் என்னுடைய பிரச்னைகளுக்காக உபயோகப்படுத்தி விட்டேன். ஆனால் ஒருநாளும் அவர் என்னை கடிந்து பேசியது இல்லை. என் தாயாரை உயர்ந்த, உன்னத நிலையில் வைத்துப் பார்க்கும் பிராப்தம் உள்ளதா? கடன் தொல்லைகளால் 39 வயதாகியும் திருமணம் பற்றி சிந்திக்கவே முடியவில்லை. திருமணம் ஆகுமா?

பதில் :
கேது
7-9-1978 அதிகாலை 4.05 செங்கல்பட்டு ல, குரு
சூ, பு சனி
சந், சுக் செ, ரா
(கடக லக்னம், துலாம் ராசி.1-ல் குரு. 2-ல் சூரி, புத, சனி. 3-ல் செவ், ராகு. 4-ல் சந், சுக். 9-ல் கேது. 7-9-1978, அதிகாலை 4.05, செங்கல்பட்டு)

அஷ்டமாதிபதி எனப்படும் எட்டுக்குடையவனின் தசையும், ஏழரைச் சனியும் சேர்ந்து நடக்குமானால் ஒருவரை கிரகங்கள் எண்ணையில் பொரியும் கோழியைப் போல வறுத்து எடுத்து விடும். கடந்த 10 வருடங்களாக கடக லக்னத்திற்கு வரக் கூடாத சனிதசை உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுபத்துவமும் சூட்சுமவலுவும் இல்லாமல் சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் அடைந்த சனியின் தசையில் உங்களுக்கும் வறுத்த கோழி நிலைமைதான். சனிதசையும், ஏழரைச்சனியும் சேர்ந்து நடந்தது மிகவும் துரதிர்ஷ்டம்.

கவலைப்படாதீர்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் ஏழரைச்சனி முடிந்து விட்டது. கடுமையான கெடுபலன்களைத் தரும் சனியின் முதல்பாதி ஒன்பதரை வருடங்களும் முடிந்து விட்டன. நடக்கும் கெடுதல்களைக் கூட தெளிவாக நகைச்சுவையுடன் எழுதி அனுப்பும் திறன் கொண்ட நீங்கள் ஒருநாளும் வாழ்விழந்து போக மாட்டீர்கள். அனைத்துக் கடன்களையும் உங்களால் அடைக்க முடியும். தற்போது சனிதசையில் உங்களின் அவயோக கிரக புக்திகளான புதன், சுக்கிரன் புக்திகள் முடிந்து, சூரியபுக்தி நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ள லக்னாதிபதி சந்திரபுக்தி முதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வந்து கடனை அடைக்கும் அளவிற்கு வழி பிறக்கும். பொருளாதார நிலைமையும் உயரும்.

தாயாரை குறிக்கும் நான்காம் அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று, மாதாகாரகன் சந்திரனுடன் நான்கில் சுபத்துவமாக இணைந்திருக்கிறார். இருவரும் திக்பலம் பெற்றும் இருக்கிறார்கள். மூன்றாவதாக குருபகவானும் திக்பலத்தில் இருக்கிறார். மூன்று கிரகங்கள் திக்பலம் பெற்றிருந்தாலே ஒருவர் நல்ல வாழ்க்கை வாழ்வார் என்பது விதி. எனவே நம்பிக்கையை இழக்காதீர்கள்.

கடைசிவரை தாயார் உங்களுக்கு உதவிக் கொண்டுதான் இருப்பார். உதவக்கூடிய தாய் கிடைப்பதும் ஒரு பெரிய வரம்தான். வரும் தீபாவளி முதல் பிரச்சினைகள் படிப்படியாக தீரத் துவங்கும். சந்திரன், சுக்கிரனின் வீட்டில் சுக்கிரனோடு இணைந்திருப்பதால் சந்திர புக்தியில் திருமணம் நடக்கும். சனிதசை, சந்திரபுக்தி திருமணத்தை கொடுப்பதோடு தாயாரின் உடல்நிலையைப் பாதிக்கும் என்பதால் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ஒரு முதியவன், பாண்டிச்சேரி.

கேள்வி :

பேத்தியின் ஏழுவயதில் குடும்பத்துடன் லண்டனில் குடியேறி விட்டார்கள். மருமகன் பிரபல டாக்டர். மூவரும் நல்லநிலையில் இருக்கிறார்கள். இப்போது பேத்திக்கு புதுச்சேரியிலேயே வரன் பார்க்கிறாரகள். வரன் இங்கேயே அமையுமா? கல்வித் தகுதிகேற்ப நல்ல குடும்பத்தில் அமையுமா? எப்போது திருமணம்? திருமணத்திற்கு பின் இந்தியாவிலேயே இருப்பாளா? அல்லது மீண்டும் லண்டன் சென்று விடுவாளா?

பதில் :
சுக்  சூ பு கேது
சனி 6-5-1993, மாலை 5.59 பாண்டிசேரி செ
 ரா ல சந் குரு
(துலாம் லக்னம், துலாம் ராசி. 1-ல் சந். 2-ல் ராகு. 5-ல் சனி, 6-ல் சுக். 7-ல் சூரி, புத. 8-ல் கேது. 10-ல் செவ், 12-ல் குரு. 6-5-1993, மாலை 5.59, பாண்டிசேரி)

எட்டாம் அதிபதி சுக்கிரன் உச்சமாகி, அவரையும், எட்டாமிடத்தையும் குரு பார்ப்பதாலும், பனிரெண்டாம் அதிபதி சுபச்சந்திரனின் பார்வையில் அமர்ந்து, பனிரெண்டாம் இடத்தில் குரு இருப்பதாலும் உங்கள் பேத்தி இந்தியாவில் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர் லண்டனில் செட்டில் ஆவார். முழுக்க லண்டன்வாசியாக இருப்பார்.

ஜாதகத்தில் பவுர்ணமி அமைப்பில் உள்ள சந்திரனுக்கு, ஏழில் புதன் உள்ளதால் உங்கள் பேத்தி மிகுந்த புத்திசாலிப் பெண். ஏழாம் அதிபதி நீசமானாலும் திக்பலம் பெற்று சந்திரகேந்திரத்தில் இருப்பதால் நல்ல குடும்ப மாப்பிள்ளை அமைவார். பேத்தியின் ஜாதகம் சந்தேகத்திற்கிடமின்றி மிக யோக ஜாதகம். லக்னாதிபதியின் உச்சபலமும், பவுர்ணமி மற்றும் சுபத்துவ தர்மகர்மாதிபதி யோகமும், அடுத்தடுத்து வரும் யோகதசைகளும் உங்கள் பேத்தி எல்லா வகையிலும் சுகவாழ்வு வாழ்வார் என்பதைக் காட்டுகிறது.

தற்போது குரு புக்தி நடப்பதால் இன்னும் ஒரு வருடத்திற்கு திருமணம் அமைய வாய்ப்பு இல்லை. துலாம் லக்னத்திற்கு குரு புக்தியில் நல்லவைகள் அமையாது. அடுத்த வருடம் ஆகஸ்டுக்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் புதன் தசை சுய புக்தியில் பேத்திக்கு திருமணம் நடக்கும்.

பா.இளவரசன், திண்டுக்கல்.

கேள்வி :

நான்கு வருடமாக நானும் ஒரு பெண்ணும் காதலித்தோம். அவள் வீட்டில் ஜாதி காரணமாக வேண்டாம் என்கிறார்கள் என்று சொல்லி என்னைத் தவிர்த்தாள். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் பட்டியல் இனம்தான். எனது உட்பிரிவு சற்றுக் கீழானது. மனம் கேட்காமல் பெரியவர்களை அனுப்பி பெண் கேட்டும் அவளது பெற்றோர் என் ஜாதியைச் சொல்லி மறுத்து விட்டார்கள். அப்போது எனக்கு வேலையும் இல்லை. பிறகு அவள் அரசு வேலையில் சேர்ந்து விட்டாள் தற்போது எனக்கும் அரசுவேலை கிடைத்து விட்டது. இடையில் தொடர்பு விட்டுப் போய் மறுபடி அவளைப் பார்க்கும் போது என்னை உதறியதற்கு மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். ஆனால் இப்போதும் வேண்டாம் என்கிறாள். கடுமையாகப் பேசி அவமானப்படுத்துகிறாள். என்னால் அவளை மறக்கவும் முடியவில்லை. வெறுக்கவும் முடியவில்லை. மீண்டும் அவள் வீட்டில் பெண் கேட்க பெரியவர்களை அனுப்பலாமா? அல்லது மறக்க முயற்சி செய்யலாமா? குருஜி அவர்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்.

பதில் :
சு  சந், செ
சூ பு 22-2-1991 மதியம் 2.30 திண்டுக்கல்  குரு கேது
சனி ரா
(மிதுன லக்னம், ரிஷப ராசி. 2-ல் குரு, கேது. 8-ல் சனி, ராகு. 9-ல் சூரி, புத. 10-ல் சுக். 12-ல் சந், செவ். 22-2-1991, மதியம் 2.30, திண்டுக்கல்)

இந்தப் பெண்ணை என்னால் மணக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு அவளது ஜாதகமும் வேண்டும். உங்களுடைய ஜாதகத்தை மட்டும் பார்த்து இருவரும் இணைவீர்களா என்று சொல்ல முடியாது. உங்கள் ஜாதகப்படி ஏழுக்குடையவன் ராகு-கேதுக்களுடன் இணைந்து, ராசிக்கு ஏழை செவ்வாய் பார்ப்பதும், எட்டில் சனி இருப்பதும் காதல் திருமண அமைப்பு என்பதால் வரும் நவம்பர் மாதத்திற்கு பிறகு அந்த பெண்ணின் வீட்டில் பேசலாம். பெரியவர்கள் சம்மதம் கிடைக்கும்.

“பதறாத காரியம் சிதறாது” என்பதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். அஷ்டமச்சனி நடப்பதால் வயதிற்கேற்ப மனஅழுத்தம் இருக்கத்தான் செய்யும். இந்த வயதில் காதலைத் தவிர வேறு எதற்கு கவலைப்படப் போகிறீர்கள்? காதலி உதாசீனப்படுத்தினால்தான் மனதில் வலி ஏற்பட்டு தூக்கம் வராது. அடுத்த வருட ஆரம்பத்தில் நல்லது நடக்கும். கவலைப்படாதீர்கள்.

பத்துக்குடையவன் குருவாகி உச்சம் பெற்று, பத்தில் ஒரு உச்ச கிரகம் அமர்ந்து, சிம்மத்தை சூரியன் பார்த்து, சந்திரனுக்கு பத்தில் சூரியன் இருப்பதால் நீங்கள் நீதித்துறை வேலையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா? தவறா? என்று ஒரு தபால் மூலம் தெரிவியுங்கள்.

ஆ.செந்தில், திருச்சி.

கேள்வி :

மானசீக குருவிற்கு வணக்கம். நான் ஒரு மாற்றுத்திறனாளி. தற்போது கூட்டுத் தொழிலாக சாமியானா பந்தல் வகைகளும், ஆட்டோவும் வைத்துள்ளேன். இந்த இரண்டையும் தனி நபராக விரிவுபடுத்தி செய்யலாமா? அல்லது வேறு தொழில் செய்யலாமா? எப்போது திருமணம் நடக்கும்? கடன்களை அடைப்பதற்கு வழிவகை உண்டா?

பதில் :
 ல பு செ, ரா, சூ
24-6-1983 அதிகாலை 4.09 திருச்சி சுக்
கேது சந் குரு சனி
(ரிஷப லக்னம், விருச்சிக ராசி. 1-ல் புத. 2-ல் சூரி, செவ், ராகு. 3-ல் சுக். 6-ல் சனி. 7-ல் சந், குரு. 8-ல் கேது. 24-6-1983, அதிகாலை 4.09, திருச்சி)

லக்னத்திற்கு ஏழில் வளர்பிறை சந்திரன், குரு இணைந்து ஏழுக்குடையவன் இரண்டில் ராகுவுடன் இருப்பதால் கூட்டுத்தொழில் செய்யலாம். ஜென்மச்சனி விலகி விட்டதால் திருமணத்திற்கு இருந்த தடையும் விலகி விட்டது. அடுத்த வருட ஆரம்பத்தில் மனைவியுடன் இருக்க முடியும். பத்துக்குடையவன் சனி என்பதால் சாமியானா தொழிலும், ஆட்டோவும் ஏற்ற தொழில்கள்தான். இந்த தொழிலையே இனிமேல் விரிவுபடுத்தலாம்.

மகனுக்கு பாதகம் ஏற்படுமா?

கா.அசோக்குமார், மதுரை.

கேள்வி :

அனுதினமும் உங்களுடைய எழுத்துகளையும், வார்த்தைகளையும் நெஞ்சில் சுமந்து வாழும் சீடனின் வணக்கங்கள். மகனின் ஜாதகத்தில் பாதகாதிபதி செவ்வாய் ஒன்பதில் ஆட்சி பெறுகிறார். அங்கே மூன்று சுப கிரகங்கள் உடன் இருந்து அதிக சுபத்தன்மையோடு இருக்கிறார். அந்த இடத்திற்கு பவுர்ணமி சந்திரனின் பார்வையும் இருக்கிறது. ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளில் பாதகாதிபதி அதிக சுபத்தன்மை பெறக் கூடாது என்று எழுதி இருந்தீர்கள். அதன்படி மகன் ஜாதகத்தில் பாதகஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் கெடுபலன்களை செய்யுமா? அடுத்தடுத்து எதிர்காலத்தில் வரும் தசைகள் அனைத்தும் பாதகஸ்தானத்தில் இருந்தே நடத்தப் படப் போகிறது. அவை அனைத்தும் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கின்றன. நீங்கள் அந்த நட்சத்திரம் மனிதனுக்கு பயன்படாத வெப்பத் தன்மையுள்ள நட்சத்திரம் என்று சொல்லி இருக்கிறீர்கள். மகனுக்கு பாதகம் ஏதாவது ஏற்படுமா? அவனது எதிர்காலம் எப்படி? பரிகாரங்கள் ஏதாவது உண்டா?

பதில் :
பு சு கு செ சூ கேது
17-5-2011 மதியம் 12.21 மதுரை
ராகு சந் சனி
(சிம்ம லக்னம், துலாம் ராசி. 2-ல் சனி. 3-ல் சந். 5-ல் ராகு. 9-ல் புத, சுக், குரு, செவ். 10-ல் சூரி. 11-ல் கேது. 17-5-2011, மதியம் 12.21, மதுரை.)

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் ஜோதிடத்தை தவறாகப் புரிந்து கொள்ளும் விஷயத்தை நீங்களும் செய்கிறீர்கள். அனுபவம் ஏற ஏறத்தான் எந்த விதியை எங்கே பொருத்திப் பார்ப்பது என்ற ஞானம் பிறக்கும். எந்த விதி முன் நிற்கும் எது பின்னிருக்கும் என்பதும் புரிய வரும். ஓரளவிற்கு எல்லா விதிகளும், விதி விலக்குகளும் தெரிந்த பிறகுதான், ஜாதகம் எப்படிப்பட்டது வலுவிழந்ததா? யோகமானதா? என்கிற ஆராய்ச்சிக்கே செல்ல வேண்டும்.

ஒருவரின் எதிர்காலத்தை அறிய ஆசைப்படுவதற்கு முன் ஒருவரது கடந்த காலத்தைப் பற்றி ஆராயுங்கள். ஏனென்றால் கடந்த காலம் உங்களுக்குத் தெரியும் அது சர்வ நிச்சயமானது. விதிகளை பொருத்திப் பார்த்து கடந்த காலத்தில் இவருக்கு ஏன் இது நடந்தது? இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது புரியும் அளவிற்கு வந்துவிட்டால் எதிர்காலத்தையும் சொல்ல முடியும். பலன் சொல்ல வந்துவிடும். எனவே ஆரம்பநிலையில் இருப்பவர்கள் ஒருவரின் கடந்த காலத்தில் ஏன் இப்படி நடந்தது என்பதை விதிகளை வைத்து புரிந்து கொள்ளுங்கள். பிறகு எதிர்காலத்தை பார்க்கலாம்.

மகனின் ஜாதகத்தில் பாதகாதிபதி, பாதகஸ்தானம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் அவனது ஜாதகத்தில் மிகவும் உயர்வாக சொல்லப்படும் சந்திரனுக்கு 6, 7, 8-ல் சுபக் கிரகங்களான குரு, புதன், சுக்கிரன் இருக்கும் சந்திராதி யோகம் இருக்கிறது. இந்த யோகத்தின் நாயகனான சந்திரன் எவ்வித பங்கமும் இன்றி பவுர்ணமி நிலையில் இருக்கிறார்.

சந்திராதி யோகம் என்பது மிகவும் உயர்வாக நமது கிரந்தங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. வி.ஐ.பி.க்களின் ஜாதகங்களில் இந்த யோகத்தை பார்க்க முடியும். மகனுக்கு இந்த யோகத்தில் அமர்ந்த புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசைகள் அடுத்தடுத்து வர இருப்பதாலும், தற்போது 23 வயதிற்குள் சிம்ம லக்னத்திற்கு வரக்கூடாத சனிதசை முடிந்து விடுவதாலும் மகன் பிரமாதமான அதிர்ஷ்டசாலியாக எதிலும் முதன்மையானவனாக இருப்பான். சாரநாதன் கேது 11-ல் இருப்பதும் யோகம்.

பாதகாதிபதிதான் சுபத்தன்மை அடையக் கூடாதே தவிர பாக்கிய ஸ்தானம் சுபத்துவமாக இருக்க வேண்டும். பாதகாதிபதி சுபத்தன்மை பெற்றாலும் பாதகத்தை அவரது தசையில்தான் செய்வார். இது நிச்சயமான விதிதான். உங்கள் மகனுக்கும் அது நடக்கத்தான் செய்யும். பாதகாதிபதி செவ்வாயின் தசை மகனுக்கு 83 வயதில் வருகிறது. மரணம் எனும் பாதகம் அப்போது நடப்பது இயல்புதான். ஜோதிடத்தை புரிவதற்கு ஒரு ஆயுள்காலம் போதாது. ஜோதிடம் பிடிபட வாழ்த்துக்கள்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 186 (08.05.18)

  1. ￰குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் கடந்த 29.11.2017எனது கேள்விக்கு பதில் அளித்துள்ளீர்கள் சனிதிசை மற்றும் ஏழரைச்சனி முடிந்தும் எனது வாழ்வில் பிரச்சனை தீரவில்லை கடன் கழுத்தை நெரிக்கிறது அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு வழி தெரியவில்லை விமோச்சனம் கிடைக்குமா

  2. ஐயா நான் 1987.09.10 மு.ப 09.20ற்கு பிறந்தேன் 2011பிறகு வாழ்க்கை மிகவும் கஷ்டமாக உள்ளது. மீனராசி ரேவதி நட்ச்சத்திரம் எப்படி இருக்கும் வாழ்க்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *