Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 161 (14.11.17)

எஸ். நல்லகுமார், ஈரோடு.

கேள்வி :

1993-ல் திருமணம். 10 வருடம் கழித்து 2003-ல் ஆண் குழந்தை. 2004-ல் பிரிவினை. 2006-ல் வலது கால் இரண்டுமுறை முறிவு. 2010-ல் மனைவி துர் மரணம். 23 வருட வேலையும் பறி போனது. பிரைவேட் லைப் இன்ஸ்சூரன்ஸ் தொழில் செய்கிறேன். மகன் மாமனாரிடம் வளர்கிறான். ஐந்து வருடங்களாக அதிக வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கி கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடி தலைமறைவாக இருக்கிறேன். இதுதான் எனது 53 வயது வாழ்க்கைச் சுருக்கம். கடன் எப்போது தீரும்? இதே தொழிலை தொடர்ந்து பார்க்கலாமா? அடிப்படை ஜோதிடக் கல்வி படித்திருக்கிறேன். ஜோதிடம் மூலம் வருமானம் வருமா? மகனுடன் எப்போது சேர்வேன்?

பதில்:
குரு சந்
ரா

 

1-12-1963
இரவு 7.25
சேலம்

சனி
சுக்,கே
செவ்
சூரி
பு

இரு ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் எந்த வீட்டோடு தொடர்பு கொள்கிறதோ அந்த வீட்டுப்பலனை அதிகம் செய்யும் என்பது ஜோதிடவிதி. சனி உங்களுக்கு ஒன்பதுக்குடைய பாக்யாதிபதியாக இருந்தாலும், அவர் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று ஆறுக்குடைய செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்து குரு, சுக்கிரன் போன்ற சுபர்களின் தொடர்பு இல்லாமலும், சூட்சுமவலுப் பெறாமலும் இருப்பதால் உங்களுக்கு எட்டுக்குடைய கெடுபலன்களையே அதிகம் செய்வார். 2004-ல் சனி தசை ஆரம்பித்ததில் இருந்தே அவரது பார்வைபடும் தனம், வாக்கு, குடும்பம் மூன்றும் உங்களுக்கு இல்லாமல் போக வேண்டும்.

ஜோதிடம் என்பதே வருமுன் காக்கச் சொல்வதுதான். ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் ஒருவருக்கு ஜோதிட அறிவு வரும். அதன்படி மிதுனலக்னத்தில் பிறந்து பவுர்ணமி மற்றும் உச்ச சந்திரனின் பார்வையில் புதன் இருப்பதால் ஜோதிட அறிவைக் கொண்ட நீங்கள் சனி தசை ஆரம்பிக்கும் முன்பே கடன் வாங்காமல் எதிலும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

சனிபகவான் பாபத்துவமாக இருக்கும் நிலையில் தாங்க முடியாத கொடுமைகளை செய்வார். அவரது காரகத்துவங்களான கடன், நோய், எதிரி, கால் ஊனம் ஆகிய அனைத்தையும் அவரது தசை முழுக்க கொடுத்தே தீருவார். ஆயினும் உங்களின் லக்னாதிபதி புதன் இரண்டு மாபெரும் சுபர்களான குரு மற்றும் பவுர்ணமிச் சந்திரனின் பார்வையில் இருப்பதால் இந்த சிக்கலில் இருந்து நல்லபடியாக மீண்டு வருவீர்கள்.

நீங்கள் ரிஷப ராசியாகி அடுத்து அஷ்டமாதிபதி தசையும், அஷ்டமச்சனியும் சந்திக்க போவதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை. ஊருக்கும் திரும்பிச் செல்ல முடியாது. செய்து கொண்டிருக்கும் தொழிலையே கருத்துடன் செய்து வாருங்கள். அடுத்த வருடம் மேமாதம் ஆரம்பிக்க இருக்கும் ராகு புக்தியில் மீண்டும் ஜோதிடத் தொடர்புகள் ஏற்படும். அதன் மூலம் ஜோதிடத்தில் இன்னும் தேர்ச்சி பெற்று புதன்தசை முதல் ஜோதிடத்தை தொழிலாக கொள்ள முடியும். வருமானமும் வரும். சனி தசை குரு புக்தி முதல் பொருளாதார உயர்வு ஏற்பட்டு கடனை அடைக்கும் ஆரம்பங்களை செய்வீர்கள். புதன் தசையில் கடன் தீரும்.

பெ. புகழேந்தி, சென்னை – 48.

கேள்வி:

ஜோதிட பேரரசருக்கு வணக்கம். சகோதரனுக்கு 37 வயதாகியும் திருமணம் கூடவில்லை. இப்போது ஒரு பெண்ணை விரும்புவதாக கூறுகிறான். திருமணம் அவன் விருப்பப்படியா அல்லது எங்கள் விருப்பப்படியா? ஏற்றுமதி தொழில் செய்யப்போவதாக சொல்லுகிறான். இவனை நம்பி கடன் வாங்கி பணம் கொடுக்கலாமா? இவனது திருமணம், எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்:
பு

28-1-1981
அதிகாலை3.29
வந்தவாசி

 ரா
 சூ,கே
செவ்
சுக்  ல சந் குரு
சனி

 

சகோதரனுக்கு தற்போது சுக்கிர புக்தி நடப்பதாலும், சுக்கிரன் குருவின் வீட்டில் இருப்பதாலும் விருப்பத் திருமணமாகவே அமையும். ஏழரைச்சனி முடிந்து விட்டதாலும், அடுத்த மே மாதம் ஜீவனாதிபதி சூரியனின் புக்தி ஆரம்பிக்க இருப்பதாலும் அடுத்த வருடம் ஏற்றுமதித் தொழில் செய்வார். பரிவர்த்தனை பெற்ற எட்டாமதிபதி பத்தாமிடத்தைப் பார்ப்பதால் ஏற்றுமதித் தொழில் கை கொடுக்கும். சூரிய புக்தியின் இன்னொரு பலனாக தந்தை பாதிக்கப்படுவார் என்பதால் தகப்பனாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

ஆர். ஜெயராமன், குரோம்பேட்டை.

கேள்வி:

83 வயதாகிறது. 75 வயது வரை எந்தவிதமான நோய் நொடியில்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து வந்தேன். கடந்த எட்டு ஆண்டுகளாக உடலில் பலவித நோய்கள் வந்து போகிறது. நீண்ட நாட்களாக சருமத்தில் எரிச்சலும், அரிப்பும் இருக்கிறது. இதற்கான காரணத்தையும், பரிகாரத்தையும், எப்பொழுது மீண்டும் நல்ல உடல் நலத்துடன் இருப்பேன் என்பதையும் கூறவும்.

பதில்:
சந்

15-11-1934
5.15மாலை
கும்பகோணம்

கே
 சனி
ரா
 செவ்
 சூ,சுக்
பு,குரு

லக்னாதிபதி செவ்வாய் வளர்பிறைச் சந்திரனின் பார்வையால் சுபத்துவம் பெற்று தன்னுடைய இன்னொரு ஸ்தானமான ஆயுள்பாவத்தை பார்த்தும், ஆயுள்காரகன் சனி ஆட்சி பெற்றும், லக்னத்தை சுபர்களான குருவும், சுக்கிரனும் பார்த்ததால் தீர்க்காயுள் வாழும் அமைப்பு கொண்ட ஜாதகம் உங்களுடையது. ஏற்கனவே நடந்த தசாநாதனான சுக்கிரன் ஆறுக்குடைய புதனுடன் இணைந்துள்ளதால், சுக்கிர தசை பிற்பகுதியில் இருந்து உங்களுக்கு நோய் தொந்தரவுகள் இருந்துதான் தீரும்.

தற்போது நடைபெறும் சூரியதசையே உங்களுக்கு அந்திம தசை என்பதால் அனைத்து நோய்களும் கட்டுக்குள் இருக்கும் என்றாலும் தீர்வதற்கு வாய்ப்பு இல்லை. செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் இருக்கும் பழமையான முருகன் கோவிலில் குறைகளை சொல்லி வழிபடுவதே உங்களுக்கான பரிகாரம்.

கே. காவியா, சாலிகிராமம்.

கேள்வி:

எழுபது வயதாகும் எனது கணவர் சினிமாத்துறையில் வேலை செய்வதாக சொல்கிறார். நன்றாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். பணம் கொண்டு வந்து கொடுப்பது இல்லை. 60 வயதாகும் நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறேன். எங்களுக்கு குழந்தை கிடையாது. இவரை நம்பி சென்னையில் இருக்கலாமா? அல்லது என் தங்கையின் வீடு மதுரைக்கு செல்லலாமா? எனக்கான வழியையும் எனது கணவர் சினிமாவில் புகழ் பெற்று சம்பாதிக்க முடியுமா என்பதையும்  சொல்லுங்கள்.

பதில்:

அனுப்பிள்ள ஜாதகத்தின்படி உங்கள் கணவரின் லக்னம் கடகம் என்பதற்கு பதில் சிம்மம் என்பதாக வரும். இளம் வயதில் சினிமாவை நோக்கிப் பயணித்து வேறு வழி தெரியாமல் அதிலேயே உழன்று, வாழ்க்கையைத் தொலைத்த ஆயிரக்கணக்கான நபர்களில் உங்கள் கணவரும் ஒருவர். ஜாதகத்தில் புதன் உச்சம் என்பதால் அவருக்கு நன்றாக எழுத வரும் என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டும் சினிமாவிற்குப் போதாது.

சினிமாவில் ஜெயிப்பதற்கும், அதன் நெளிவு, சுழிவுகளை தெரிந்து கொள்வதற்கும் வேறுவிதமான ஜாதக அமைப்பு வேண்டும். அது உங்கள் கணவருக்கு இல்லை. அதேநேரத்தில் அவர் கடைசி வரை திரைத்துறையை விட்டு வரவும் மாட்டார். இவரை நம்ப வேண்டாம். தங்கை வீட்டிற்கு செல்லவும்.

பி. கருப்பசாமி, குரும்பூர்.

கேள்வி:

32 வயதாகியும் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எத்தனையோ ஜாதகங்கள் வந்தும் ஒன்றும் சேரவில்லை. அவளுக்கு செவ்வாய் தோஷம் என்று சொன்னதால் பரிகாரங்களும் செய்து விட்டோம். ராகு-கேது பரிகாரங்களும் செய்து இருக்கிறோம். இவளால் என் மனைவிக்கு தூக்கம் சரியாக இல்லாமல் மன உளைச்சல் வந்து உடல்நலம் கெட்டு விட்டது. மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? வேறு எதுவும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? உங்களுடைய கணிப்புகளையும், ராசிபலன்களையும் படிக்கிறேன். எனக்கு அவை சரியாக இருப்பதால் என் மகள் விஷயத்திலும் நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று எழுதி இருக்கிறேன்.

பதில்:
 சந் ரா  சூரி
 குரு

30-6-1986
மதியம்2.25
தூத்துக்குடி

 பு
சுக்
செவ்  சனி  ல
கே

 

திருக்கணிதப்படி 3-ல் செவ்வாய் என்பதால் உங்கள் மகளுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. லக்னத்திற்கு 2-ல் சனியும், 7-ல் ராகுவும் இருப்பதே அவளது திருமண தாமதத்திற்கு காரணம். இனிமேல் பரிகாரங்கள் எதுவும் செய்யத் தேவை இல்லை. அடுத்த வருடம் இறுதி அல்லது 2019 ஆரம்பத்தில் சூரியதசை, சுக்கிர புக்தியில் 33 வயதில் மகளுக்கு திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு பிறகு மிகவும் சிறப்பாக இருப்பாள். கவலை வேண்டாம்.

 

மைத்துனரின் கனவுகள் எல்லாம் பலிக்கிறது..!

. விஜியராமன், பண்ருட்டி.

கேள்வி:

என்னுடைய மைத்துனர் சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் உடையவராக இருக்கிறார். இவருக்கு தூக்கம் சரியாக வருவது இல்லை. மீறி சில நேரங்களில் உறங்கும்போது வரும் கனவுகள் அனைத்தும் நிஜத்திலும் நடப்பதாக சொல்கிறார். இதுவரை தான் கண்ட கனவுகள் எல்லாமே பலித்து இருக்கிறது என்கிறார். எதிர்காலத்தில் இவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல ஆன்மிகவாதியாக இருப்பாரா? அல்லது சாதாரண ஆன்மிகவாதியாக வருவாரா என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறேன். இவர் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார். முடியுமா? திருமண வாழ்க்கை இவருக்கு உண்டா?

பதில்:
 சனி
கே
 பு,சுக்
செவ்
 சந்
சூ

18-6-1996
காலை10.25
பண்ருட்டி

 குரு ரா

 

மைத்துனருக்கு எட்டு வயது முதல் கேதுவுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்து சொந்தசாரத்தில் குருவின் வீட்டில் அமர்ந்த சனியின் தசை நடப்பதால் அதிகமான ஆன்மிக ஈடுபாடு இருக்கிறது. குரு, சனி, கேது மூவரும் சேர்ந்து அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ராசி, லக்னம் இரண்டோடு இவர்கள் மூவரும் சம்பந்தப்படும்போது ஒரு உன்னதமான எதிர்பார்ப்பு இல்லாத ஆன்மிகவாதி பிறப்பார். அதோடு இவர்களின் தசையும் சரியான பருவத்தில் அவருக்கு நடந்தால் வாழ்நாள் முழுவதும் அவர் பற்று இல்லாத துறவியாகவும், எதிர்பார்ப்பு இல்லாத ஆன்மிக வாதியாகவும் நீடித்து இருப்பார்.

உங்கள் மைத்துனர் விஷயத்தில் 27 வயதிற்கு பிறகு சுக்கிரனின் வீட்டில், சுக்கிரனோடு இணைந்து போகஸ்தானாதிபதியான சந்திரனின் சாரத்தில் இருக்கும் புதனின் தசை நடக்க உள்ளதால் அவர் 30 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்வார். மணமானதன் பிறகு இவருடைய எதிர்பார்ப்பில்லா ஆன்மிக விஷயங்கள் படிப்படியாக குறையும்.

தற்போது சிம்ம லக்னத்திற்கு பாவியான சனியின் தசை நடப்பதால் தூக்கமின்றி கஷ்டப் படுகிறார். ஒரு மனிதன் இரவில் தனது ஆழ்ந்த தூக்க நேரம் முழுவதும் கனவு கண்டு கொண்டே இருக்கிறான் என்றுதான் விஞ்ஞானம் கூறுகிறது. இதில் தூக்கம் கெடும் போதோ அல்லது விழிப்பு நிலை வரும் போதோ காணும் கனவு மட்டுமே அவனது நினைவில் இருக்கும்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு வரும் பல கனவுகள் நம்ப முடியாதவை. நிஜத்தில் நடக்க இயலாதவை. உதாரணமாக ஒரு மனிதன் கழுதையும், குதிரையும் கலந்தாற் போன்ற ஒரு மிருகத்தையோ, முன்பக்கம் சிங்கமும், பின் பக்கம் புலியும் போன்ற தோற்றம் கொண்ட விலங்கையோ கூட கனவில் பார்க்க முடியும். அவைகள் எல்லாம் நிஜத்தில் பலிக்கும் என்பது ஒரு நாளும் நடக்காது. தான் பறப்பது போன்ற கனவுகளும் பலருக்கு வருவது உண்டு. அவர்கள் எல்லோரும் விடிந்ததும் பறக்க முடியுமா?

லக்னம், ராசிக்கு பாவியான ஆறுக்குடையவன் தசை நடக்கும் போது இது போன்ற எண்ணங்களும், தவறான புரிதல்களும் ஒருவருக்கு ஏற்படுவது இயல்புதான். மைத்துனரின் 27 வயதிற்கு பிறகு சனிதசை முடிந்ததும் எதிர்பார்ப்பில்லா ஆன்மிக ஈடுபாடு குறையும் என்பதால் உங்கள் மைத்துனர் எதிர்காலத்தில்  கோவிலை வைத்து பிழைப்பார்.

 

3 Comments on Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 161 (14.11.17)

  1. ஐயா வணக்கம் தொழில் எப்போது அமையும் வருமானம் எப்போது வரும் மிகவும் கஷ்டத்தில் உள்ளே இல்லை மரணம் எப்போது ஐயா தயவுசெய்து திருச்சி விஜய் 17;3;1975 காலையில் 10;30 பிறந்த ஊர் சிறு கிராமத்தில் பிறந்த திருச்சி மாவட்டம்

Leave a Reply