adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 88 (31.5.2016)

டிவிஜயகுமார், சிங்கப்பெருமாள்கோவில்.

கேள்வி :

இரண்டுமுறை கடிதம் எழுதியும் நீங்கள் பதில் அளிக்கவில்லை. உங்களது பதிலில்தான் என் வாழ்க்கை இருக்கிறது. நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். அந்தப் பெண்ணிற்கு என்னைவிட்டால் யாரும் கிடையாது. அம்மா, அப்பா இல்லாத பெண். எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். என் பெற்றோரின் அனுமதியுடன் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். இது நடக்குமா? என் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்குமா?

பதில்:

உங்களது கேள்விற்கு ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன். என் பதிலில்தான் உங்கள் வாழ்க்கையே இருக்கிறது எனும் போது வாராவாரம் மாலைமலரைத் தொடர்ந்து பார்க்க வேண்டாமா? இப்படித்தான் ஏற்கெனவே பதிலளித்த கேள்விகளுக்கு நான்குமுறை, ஐந்துமுறை என்று நம்பர் போட்டு மறுபடியும் மறுபடியும் கேள்விகளை சிலர் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். கேள்விகளை மட்டும் அனுப்பினால் போதாது. பதில் வருகின்றதா என்று வாராவாரம் கவனிப்பது நல்லது.

மல்லிகா, சென்னை -93.

கேள்வி :
மகன் நன்றாகப் படிப்பானா? நல்லவேலை கிடைக்குமா? எந்த வயதில் திருமணம் நடக்கும்? கணவருக்கு 5 வருடத்திற்கு முன் பைபாஸ் சர்ஜரிநடந்ததுஎனக்கும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட வியாதி இருக்கிறது. மகன் ஜாதகப்படி எங்கள் இருவரின் ஆயுட்காலம் நல்லபடியாக இருக்கிறதா? திருநெல்வேலி வாக்கியப்பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட ஜாதகத்தில் பிறந்த நேரம் குறிப்பிடப்படவில்லைநாழிகைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கும் மகனின் பிறந்தநேரம் சரியாகத்தெரியவில்லை. நீங்களே பிறந்த நேரத்தை கணித்துப் பதில் சொல்லவும்.
தில்:

ஏற்கனவே சிலவாரங்களுக்கு முன் இதேபகுதியில் வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்படும் ஜாதகங்கள் துல்லியமானவை அல்ல என்றும் எந்த ஒரு ஜோதிடர் பிறந்தநேரத்தை ஜாதகத்தில் குறிப்பிடாமல் வெறும் நாழிகைக் கணக்கை மட்டும் எழுதுகிறாரோ அவர் அந்த ஜாதகத்தில் தவறு செய்திருக்கிறார் என்றும் எழுதி இருக்கிறேன்.

தான் செய்த தவறை அடுத்த ஜோதிடர் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு ஜோதிடர் வேண்டுமென்றே ஜாதகத்தில் பிறந்தநேரத்தை மறைக்கிறார். ஜோதிடர் எழுதாதது ஒரு பக்கம் இருக்கட்டும். 1996-ல் பிறந்து 20 வயதே ஆன உங்கள் மகனின் பிறந்தநேரம் உங்களுக்கே தெரியவில்லை என்றால் மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம்? வாக்கியப் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நாழிகைக்கணக்கின்படி பிறந்தநேரத்தை கணிப்பது தவறாகவே இருக்கும். முதலில் உங்கள் மகனின் பிறந்தநேரத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.

கே. ராஜூ, தாதகாபட்டி.

கேள்வி :

நினைவூட்டுக் கடிதமாக இதை எழுதுகிறேன். ஏற்கெனவே எனது பேரன் பற்றிய கடிதத்திற்கு 20.1.15 மாலைமலரில் சாந்திமுகூர்த்தத்திற்கு தடைநீங்குமா? என்ற தலைப்பில் பதில் கொடுத்திருந்தீர்கள். அதில் அஷ்டமச்சனி முடிந்த பிறகு தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்று பதில் கொடுத்திருந்தீர்கள். ஆனால் அவர்கள் இன்னும் சேரவில்லை. இவர்கள் ஒன்று சேர்வார்களா என்று தவிக்கும் இந்தக் கிழவனுக்கு பதில்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

நீங்கள் குறிப்பிடும் அந்த 20-1-2015 மாலைமலர் பதிலில் உங்கள் பேரனின் ஜாதகம் தவறாக கணிக்கப்பட்டு லக்னம் மாறுவதாகத் தோன்றுகிறது. பிறந்தநேரம் குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் அனுப்பாததால் பெண்ணின் ஜாதகத்தை வைத்துப் பலன் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதோடு கடுமையான தோஷ அமைப்புடைய இந்தப் பெண்ணிற்கு 23வயதில் திருமணம் செய்தது பெரிய தவறு என்றும் அடுத்து வரும் சுக்கிர தசை குருபுக்தி கணவன் மனைவியைப் பிரிக்கும் என்றும் சொல்லியிருக்கிறேன்.

விவாகரத்து, குழந்தைபாக்கியம் போன்ற முக்கியமான கேள்விகளுக்கு கணவன் மனைவி இருவரின் ஜாதகத்தையும் ஒருசேரப் பார்த்தால்தான் துல்லியமாகப் பலன் சொல்ல முடியும். இப்போது நீங்கள் அனுப்பியுள்ள இருவரின் ஜாதகப்படி சேர்ந்து வாழ்வதற்கு வழியில்லை. உங்கள் பேரனுக்கு ஏழாமிடத்து அதிபதி குருபகவான் நீசமாகி பதினொன்றுக்கு அதிபதி சந்திரன் கேந்திரவலுவுடன் ஏழாமிடத்தில் உள்ளதால் இரண்டு திருமண அமைப்பு உள்ளது.

எம். முருகைய்யன், அன்னதானப்பட்டி.

கேள்வி:

பெற்றோர்களை இழந்த நான் என் அக்காவிற்கும் தங்கைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டியிருந்ததால் எனக்கு திருமணம் செய்ய வருடங்கள் கடந்து இப்போது ஐம்பத்திரண்டு வயதாகிவிட்டது. என் உடன்பிறப்புகள் எனக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் சரியாக வரவில்லை. எனக்குத் திருமணம் செய்யும் வாய்ப்பு உள்ளதா?

செ,பு குரு சூ  சுக், ரா
 ல ராசி
சந்
பதில்:

(கும்பலக்னம் தனுசுராசி மூன்றில் செவ் புத குரு நான்கில் சூரி ஐந்தில் சுக் ராகு 29-05-1964 0.31 அதிகாலை சேலம் )

லக்னம் லக்னாதிபதி ராசி சுக்கிரன் அனைவரும் கும்ப லக்னப் பாவியான சந்திரன் சம்பந்தப்பட்ட ராகுகேதுக்களின் நட்சத்திரத்தில் இருப்பது கடுமையான தோஷம். ராகுகேதுக்களும் பாபத்துவம் பெற்று தங்களின் சுய நட்சத்திரத்திலேயே ராசியிலும், ராசிக்கு ஏழிலும், புத்திரஸ்தானத்திலும் இருக்கிறார்கள். தாம்பத்திய சுகத்தைத் தரவேண்டிய சுக்கிரனும் ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் கிரகணமாகி விட்டார். ஏழாமிடத்தை சனி பார்ப்பதும் குற்றம்.

ஆயினும் மற்ற கிரகங்களிடமிருந்து பறித்ததை ராகு தனது தசையில் தருவார் என்ற விதிப்படியும், ராசி லக்னத்தின் இரண்டாமிடங்கள் பாதிக்கப்படாமல் சூரியன் வர்க்கோத்தமம் பெற்றுள்ளதாலும் உங்களுக்கு கண்டிப்பாக திருமண வாழ்க்கை உண்டு. உடனடியாக ஸ்ரீகாளஹஸ்தியில் ருத்ராபிஷேகம் செய்வதோடு ராகுவிற்குரிய தானங்களையும் செய்யவும்.

எஸ். பிரியா, கன்னியாகுமரி.

கேள்வி :

பலமுறை கேள்வி அனுப்பி செவ்வாய்தோறும் ஜோதிடப்பகுதியைப் பார்த்தும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த முறையாவது பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். எம்.காம் பி.எட் முடித்துள்ள எனது மகளுக்கு அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்குமா? அல்லது அரபு நாடுகளில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்குமா? எனது மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

சூ சுக், ரா
ல,பு குரு ராசி
சந்,செவ் சனி
 பதில்:

(கும்பலக்னம் தனுசுராசி லக்னத்தில் புத,குரு, இரண்டில் சூரி, மூன்றில் சுக்,ராகு. பத்தில் சனி, பதினொன்றில் செவ். 2-4-1986, 4.35 அதிகாலை, கன்னியாகுமரி)

சந்திரனுக்கு கேந்திரத்தில் சூரியன் அமர்ந்து, ராசிக்குப் பத்தாமிடத்தைப் பார்த்து, சிம்மத்தை இரண்டு சுபர்கள் வலுப்பெற்றுப் பார்த்ததால் உங்கள் மகளுக்கு உறுதியாக அரசுவேலை கிடைக்கும். அதேநேரத்தில் அடுத்து சர ராசியில் அமர்ந்த ராகுதசை நடக்க உள்ளதால் அரபு நாட்டு வேலை வாய்ப்பும் உண்டு. இது போன்ற அமைப்புக்கு வெளிநாட்டில் அரசுப் பணியாகவும் இருக்கும். உள்ளூரிலா வெளிநாட்டிலா என்பதை அந்த நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஜாதகம் நன்றாக இருப்பதால் மகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

கடன் தொல்லை எப்போது தீரும்?

எஸ். பக்கீர்மைதீன், அருப்புக்கோட்டை.

கேள்வி:

உங்கள் மாணவனான நான் நினைவு தெரிந்து பதிமூன்று வயதிலிருந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். கடன்தொல்லை எப்போது தீரும்? டீக்கடை நடத்தி வருகிறேன். வரவுக்கும் செலவுக்கும் சரியாக உள்ளது. துன்பமில்லாத வாழ்க்கை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? திருமணம் எந்த வயதில் நடக்கும்? எப்போது விடிவுகாலம்?

குரு, ரா
ராசி
 ல,சுக் சூ,பு சனி  செவ் சந்
பதில்:

(தனுசுலக்னம் கன்னிராசி லக்னத்தில் சுக், நான்கில் குரு ராகு, பதினொன்றில் செவ் பனிரெண்டில் சூரி புத சனி)

“அவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது அவன் தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது... யா அல்லாஹ்.. உனையன்றி இவ்வுலகில் வேறெதுவும் உன்னதம் கிடையாது” என்ற புனித வரிகள் உங்கள் கடிதத்தைப் படிக்கையில் நினைவுக்கு வருகின்றன. நடப்பவை அனைத்தும் பரம்பொருளின் கருணையே...!

திருக்கணிதப்படி கன்னிராசியாகி இளம்பருவத்தில் ஏழரைச்சனி நடந்ததால் இதுவரை எதுவும் சுகப்படவில்லை. நடைபெறுவது ஆட்சி பெற்ற லக்னாதிபதி தசை என்றாலும் லக்னாதிபதியும் புக்திநாதர்களும் ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்ட புதனின் சாரம் வாங்கியதால் கடன் தொல்லை இருக்கிறது.

கவலை வேண்டாம். லக்னாதிபதி ஆட்சிபெற்று, ஐந்திற்குடையவன் ஐந்தைப் பார்த்து, தர்மகர்மாதிபதிகளைக் குரு பார்த்த யோகஜாதகம் உங்களுடையது. பத்தில் திரவக் காரகனான சந்திரன் இருப்பதால் டீக்கடைத் தொழில் உங்களுக்கு லாபம் தரும். குருதசை சுக்கிரபுக்தியில் அடுத்தவருடம் ஜூலைக்குப் பிறகு திருமணம் நடக்கும். சூரிய புக்தியிலிருந்து கடன்தொல்லை படிப்படியாக விலகும். உங்கள் ஜாதகப்படி குழந்தை பிறந்த பிறகு கடனில்லாத நிம்மதியான வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *