Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 70 (12.1.16)

ஆர். லட்சுமணன், மணப்பாறை.

செவ் குரு
சூ,ரா
சுக்
ராசி
பு  ல
 சனி சந்
கேள்வி :

உங்கள் வியாழக்கிழமை கட்டுரைகளின் தீவிர ரசிகன் நான். எனது மகன் . டி. . படித்து தனியார்துறையில் வேலை செய்கிறான். நான்குஆண்டுகளாக அரசுவேலைக்குப் பலமுறை தேர்வு எழுதியும் வேலைகிடைக்கவில்லை. எனது மகனுக்கு அரசுப் பணி கிடைக்குமா? கிடைக்காதா? கிடைக்கும் என்றால் எப்போது கிடைக்கும்?.

பதில்:

(சிம்மலக்னம், விருச்சிகராசி. ஐந்தில் சனி. ஆறில் புதன். ஏழில் சூரி, சுக், ராகு. ஒன்பதில் செவ். பத்தில் குரு.)

மகனுக்கு சிம்மலக்னமாகி லக்னாதிபதி சூரியன் ஏழாமிடத்தில் அமர்ந்து சிம்மத்தைப் பார்த்து வலுப்படுத்துவதாலும் ராசிக்கு பத்தாமிடமும் சிம்ம வீடாகி சந்திரனுக்கு நான்கில் சூரியன் அமர்ந்துள்ளதாலும் அரசுவேலை நிச்சயம் கிடைக்கும். தற்போது மகனின் விருச்சிகராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் தேர்வு எழுதியும் பலன் கிடைக்கவில்லை. திருக்கணிதப்படி நடக்கும் புதன்தசை சூரியபுக்தியில் 2017-ம் வருடம் ஆவணி மாதம் மகன் அரசுப்பணியில் இருப்பார்.

ரா. ஆறுமுகம், திருநெல்வேலி டவுன்.

செவ்
குரு,ரா
ராசி சந்
சூ
சுக்
 பு சனி
கேள்வி:

பணிஓய்வு பெற்ற நிலையில் இதுநாள்வரை வேலை கிடைக்கவில்லை. பணி செய்த காலத்தில் நிர்வாகத்தை எதிர்த்துப் போட்டிருக்கும் வழக்கு வெற்றி ஆகுமா? வீடு வாங்கும் யோகம் உண்டா? ஒத்தியாவது எடுக்க முடியுமா? உறவினர்களிடம் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா? மணமான நாள் முதல் மனைவிக்கும் எனக்கும் வாழ்க்கையில் பிணைப்பு இன்றித்தான் இருக்கிறது. இவளால் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இனியாவது இது சரியாகுமா?

பதில்:

(ரிஷபலக்னம். கடகராசி. ஐந்தில் சனி. எட்டில் புத. ஒன்பதில் சூரி, சுக். பத்தில் செவ், குரு, ராகு)

வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் அஷ்டமாதிபதி குருவின் சாரம் வாங்கி செவ்வாயுடன் இணைந்து சனியின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடக்கிறது. பூர்வஜென்ம வினைகளின்படி வாழ்வின் இறுதிப்பகுதியில் உங்களுக்கு சில மனக்கஷ்டங்கள் இருக்கும். மனைவியைக் குறிக்கும் செவ்வாய் ராகுவுடன் இணைந்து ஏழாம்வீட்டை சனி பார்த்ததால் மனைவியை நீங்கள் குறை சொல்லத்தான் செய்வீர்கள். அவரும் அது போலத்தான் நடந்து கொள்வார்.

பத்தாம் வீட்டில் சுபத்துவமற்ற நிலையில் இருக்கும் ராகு வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளை பாதிப்பார் என்ற விதிப்படி ராகுதசை சுய புக்தியிலேயே ஒய்வு பெற்று இருக்கிறீர்கள். 2016 ஆம் ஆண்டு பிற்பகுதில் இருந்துதான் உங்களுக்கு நிம்மதியான தொழில் அமைப்புகள் உருவாகும். 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் வழக்கு சாதகமான அமைப்பிற்கு வரும். வீடு தற்பொழுது ஒத்திக்குச் செல்ல முடியும்.

வி. முருகேசன், சேக்மானியம் போரூர்.

கேள்வி:

நாற்பத்தைந்து வயதான என் மகனுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. அந்திம காலத்தில் 75 வயதில் இருக்கும் நானும் என் மனைவியும் வருத்தத்திலும், குழப்பத்திலும் இருக்கிறோம். மகனின் குடும்பமும் நாங்களும் அவனை நம்பித்தான் இருக்கிறோம். கடந்த நான்கு, ஐந்து மாதமாக வேலைக்குச் செல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கிறான். எனது குடும்பத்தின் நிலை என்ன? எங்கள் பேச்சைக் கேட்பானா?

பதில்:

மகனைப் பற்றிய கேள்விக்கு பேரன், பேத்திகளின் பிறந்தநாளை மட்டும் அனுப்பி உள்ளதால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆயினும் அனுப்பியுள்ள பிறந்ததேதிப்படியே பேரன் பேத்திகளுக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. மகன் மருமகள் ஜாதகங்களிலும் சனியின் அமைப்பு இருக்கலாம். பொதுவாக ஒரு மனிதனின் குடிப்பழக்கத்திற்கு நீர்ராசிகளில் அமர்ந்து லக்னத்தோடு சம்மந்தப்படும் சனியே காரணமாவார். குடும்ப உறுப்பினர்களின் ஜாதக விவரங்களை அனுப்புங்கள் தெளிவாகப் பதில் சொல்கிறேன்.

கே. மணி, நாகர்கோவில்.

சுக் செவ்
சூ
பு
ராசி குரு
சனி
ரா
 சந்
கேள்வி:

குருஜி அவர்களுக்கு வணக்கம். பல ஜோதிடர்கள் என் மகளின் ஜாதகத்தைப் பார்த்து சொன்ன பலன்கள் மாறுபட்ட கருத்துக்களாக இருப்பதால் ஜோதிடத்தில் மிக உயர்ந்தநிலையில் உள்ள உங்களின் பதிலுக்குக் காத்திருக்கிறேன். எனது மகள் முதுகலைப் படிப்பில் மாநில அளவில் ரேங் எடுத்தவர். வேலைக்காக பலவிதமான தேர்வுகளை எழுதி வருகிறார். அதில் சிலவற்றில் ஒன்று, இரண்டு மார்க் வித்தியாசத்தில் தவறி இருக்கிறார். சிலவற்றில் நேர்முகத் தேர்வுக்கு சென்றும் வேலை கிடைக்கவில்லை. இதனால் அவளின் திருமணமும் தள்ளிப்போகிறது. எனவே என் மகளுக்கு வேலை மற்றும் திருமணம் எப்பொழுது என்பதற்கு குருஜி அவர்களின் தெய்வீக வாக்கை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

(மேஷலக்னம். துலாம்ராசி. இரண்டில் செவ், நான்கில் குரு, பத்தில் சனி, ராகு. பதினொன்றில் சூரி, புத, பனிரெண்டில் சுக்)

மகள் ஜாதகத்தில் சிம்மத்தை சூரியன் பார்த்து உச்சம்பெற்ற குரு பத்தாமிடத்தைப் பார்ப்பதால் அரசுத்துறை வங்கியில் 2016ம் வருடம் தைமாதம் ஆரம்பிக்கும் சனிதசை குருபுக்தியில் வேலை கிடைக்கும். வேலை கிடைத்த உடனேயே திருமணம் பாக்கியம் உண்டு. லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன் உச்சம் பெற்று இருப்பதால் திருமணத்திற்குப் பிறகு அமோகமான வாழ்க்கை உண்டு.

ஏழுவயது மகன் பேசுவானா?
 செவ்
ராசி  சுக்
கே
சூ
சனி
சந்

ஆர். கோபி, கெங்கவல்லி.

கேள்வி:

ஏழுவயது மகன் இன்னமும் பேசவில்லை. வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை இனிமேலாவது பேசுவானா? அவனது எதிர்காலம் எப்படி? நான் கடன்பிரச்னையில் தவிக்கிறேன். தீர்வு கிடைக்குமா? குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஜாதகத்தையும் அனுப்பியிருக்கிறேன்.

பதில்:

திருக்கணிதப்படி மேஷலக்னம் விருச்சிகராசி, மூன்றில் செவ், நான்கில் சுக், கேது. ஐந்தில் சூரி, சனி)

மகன் ஜாதகத்தில் வாக்குஸ்தானம் எனப்படும் லக்னத்திற்கு இரண்டாமிடத்தை சனியும் ராசிக்கு இரண்டாமிடத்தை செவ்வாயும் வலுப்பெற்றுப் பார்த்து வாக்குஸ்தானாதிபதியான சுக்கிரனும் கேதுவுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்து அவரது ஜென்மவிரோதியான குருவின் பார்வையைப் பெற்றதால் இதுவரை பேச்சு வரவில்லை.

பேச்சுக்குக் காரகனாகிய குருபகவானும் நீசமாகி ராகுவுடன் இணைந்து செவ்வாய் பார்வையைப் பெற்றிருக்கிறார். அதேபோல இன்னொரு காரகனான புதனுக்கும் செவ்வாயின் பார்வை இருக்கிறது. தற்பொழுது பாதகாதிபதி சனியின் தசை நடப்பதால் பரம்பொருள் மட்டுமே மகனைப் பேச வைக்க முடியும். திருக்கணிதப்படி மகனுக்கு விருச்சிகராசி என்பதே சரி.

உங்கள் மனைவிக்கும் விருச்சிகம் மூத்தமகளுக்கு தனுசு இளையமகனுக்கு துலாம் என ஐந்துபேர் கொண்ட குடும்பத்தில் நான்குபேருக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் உங்களுக்கு சிம்மலக்னமாகி கடன் ஸ்தானாதிபதியான சனியுடன் இணைந்து லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகுதசை நடப்பதாலும் கடன் தொல்லைகளும் நிம்மதியிழப்பும் இப்போது இருக்கிறது. ஆயினும் சனி படிப்படியாக விலகியதும் ராகுதசை முடிந்து குருதசை ஆரம்பித்ததும் வாழ்க்கையில் அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி மேன்மையான நிலைக்கு வருவீர்கள். உங்கள் லக்னாதிபதி சூரியன் சந்திரனுக்கு கேந்திரத்தில் உச்சமாக இருப்பதே இதை நிரூபிக்கும்.

நடந்து கொண்டே சாவேனா?
ல,சூ
பு,சுக்
செவ்
சனி
ராசி
கே
குரு சந்

பத்மினி, கூடுவாஞ்சேரி.

கேள்வி:

மாலைமலரை தொடர்ந்து படிக்கும் உங்களின் தீவிர வாசகி நான். சென்றவாரம் ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை இருந்தால் அசுபபலன்களே இருக்கும் என்று கூறியுள்ளீர்கள். என் ஜாதகத்தில் அந்த அமைப்பு இருப்பதால் நான் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் சொல்லிமாளாது. நடைபெறும் குருதசையே இந்த லட்சணம் என்றால் வரப்போகும் சனிதசையை நினைக்கும் போது வாழ்க்கையே வெறுத்துப்போகிறது. வாழ்வின் முற்பகுதியில் கஷ்டங்களை அனுபவித்தாலும் பிற்பகுதி நிம்மதியாக இருக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டுகிறேன். பிள்ளைகளால் நிம்மதி இருக்குமா? அல்லது கடைசிவரை உழைத்துக் கொண்டும், போராடிக் கொண்டும்தான் இருப்பேனா? ஒரு தாயாய் என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பையும், நல்ல வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்து விட்டு நோயில் படுக்காமல் நடந்துகொண்டே சாக விரும்புகிறேன். மாலைமலர் மூலம் எத்தனையோ குடும்பப் பிரச்னைகளுக்கு ஆறுதல் தரும் குருஜி அவர்கள் எனக்கும் பலன் கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

பதில்:

(மீனலக்னம், கன்னிராசி. லக்னத்தில் சூரி, புத, சுக். இரண்டில் செவ், சனி. ஆறில் கேது. எட்டில் குரு)

சந்திரகேந்திரத்தில் புதன் நீசபங்கம் பெற்றதால் ஜோதிட ஞானத்தை இயல்பாகவே கொண்ட நீ நான் பொதுவாகச் சொல்லும் பலன்களை உன்னுடைய ஜாதகத்தில் பொருத்திப் பார்ப்பது தவறு. ஜோதிடத்தில் ஏராளமான விதிகள் இருப்பதைப் போலவே அவற்றுக்கு விதிவிலக்குகளும் இருக்கின்றன.

உன்னுடைய ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் சனி, செவ்வாய் இணைந்து இருந்தாலும் அவர்களுக்கு குருவின் பார்வை இருப்பதால் தோஷம் இல்லை. அதேநேரத்தில் உனது லக்னாதிபதியான குருபகவான் எட்டில் மறைந்து நவாம்சத்தில் நீசமாகி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமர்ந்து தற்பொழுது தசை நடத்திக்கொண்டு இருப்பதாலும், குருதசை ஆரம்பித்ததில் இருந்தே உன்னுடைய கன்னிராசிக்கு ஏழரைச்சனி நடந்ததாலும், தற்பொழுது உனது மகனுக்கு விருச்சிகராசியாகி ஏழரைச்சனி நடந்துகொண்டு இருப்பதாலும் உனக்கு கஷ்டங்கள் தொடர்கதையாகி விட்டன.

ஆனால் அடுத்து நடக்க இருக்கும் சனிதசை என்னுடைய பாபக்கிரகங்களின் சூட்சும வலுத்தியரிப்படி நீசமாகி தனக்கு வீடு கொடுத்தவனுடன் இணைந்து நீசபங்கம் பெற்று உச்சனின் சாரம் வாங்கி குருபார்வையில் இருப்பதால் சனிதசை ஆரம்பித்ததும் சொந்தவீடு, வாகனம், கணவர்சுகம் என்று சந்தோஷமாய் இருப்பாய். சுருக்கமாகச் சொல்வதென்றால் நீசசனியின் பார்வை வாங்கி எட்டாம் இடத்தில் பகைபெற்று மறைந்த குருதசை உன்னைப் படுத்தும். ஆனால் குரு பார்வை வாங்கிய சனிதசை உன்னைக் கௌரவப்படுத்தும். இதுவே ஜோதிட சூட்சுமம். மனதைத் தளரவிடாதே.

பிள்ளைகளைக் குறிக்கும் ஐந்துக்குடைய சந்திரன் பௌர்ணமி யோகத்தில் ஏழாமிடத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதால் உன்னுடைய குழந்தைகள் நன்றாகப் படித்து நல்வாழ்வு வாழ்வார்கள். லக்னத்திற்கு ஆறாமிடத்தில் கேதுவும் ராசிக்கு ஆறாமிடத்தில் ராகுவும் இருப்பதால் வாழ்நாள் முழுக்க எவ்விதமான பெரிய நோயும் இன்றி ஆரோக்கியமாகவே தீர்க்காயுளுடன் இருப்பாய்.

Be the first to comment

Leave a Reply