Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 289 (24.08.2021)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : 9768 99 8888

எழிலரசன்சதாசிவம் ராசிபுரம்.

கேள்வி.

குருஜி.. எனக்கு இப்பொழுது புதன் தசையில், குரு புக்தி நடக்கிறதுசெவ்வாய் கடகத்தில் இருப்பதால் சிகப்பு நிற கட்டிடத்திற்குள் நுழைய வேண்டி வரும் என்று சொன்னீர்கள்அது போலவே நடந்து முடிந்து ஒரு சிறிய மனை வாங்கியுள்ளேன்தில் எப்போது வீடு கட்ட துவங்கலாம்? புயல் ஓய்ந்து இப்பொழுதுதான் சிறு காற்று வீசுகிறதுதயவு செய்து பதில் சொல்லுங்கள்.

பதில்.

(கடகலக்னம், துலாம்ராசி. 1ல் செவ்,ராகு, 4ல் சந், 5ல் சுக், 7ல் சூரி,புத,கேது,சனி, 8ல் குரு)

சொந்த வீட்டைக் கொடுக்கின்ற 4ம் பாவகத்தை குரு பார்த்து, 4ல் பாதி ஒளித்திறனுடன் கூடிய சந்திரன் வலுவாக லக்னாதிபதியாகி அமர்ந்துள்ளதால், உங்களுக்கு சொந்த வீடு பாக்கியம் அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உண்டு.  வரும் 2022 மார்ச் மாதம் வீடு கட்டத் தொடங்குவீர்கள். நல்லபடியாகவே வீடு அமையும். தென்றல் வீச ஆரம்பித்து விட்டது. இனி புயல் அடிக்காது. நன்றாக இருப்பீர்கள். கவலை வேண்டாம்.

எஸ்.கவிப்பிரியாமதுரை.

கேள்வி.

ஜோதிடக்கலை அரசருக்கு எனது பாதம் பணிந்த வணக்கங்கள். சகோதரனுக்கு கடந்த ஏழு, எட்டு வருடங்களாக எந்த ஒரு வேலையும் நிலையாக இல்லைநாற்பத்தி மூன்று வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லைசில நேரங்களில் தனியே அவராக பேசிக் கொண்டிருக்கிறார்அவர் நல்ல நிலைமைக்கு வருவாரா? திருமணம் அவருக்கு உண்டாஅவரால் எவருக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் இருக்கிறார்இவரின் நிலைமை இப்படியே தொடருமாஇல்லை மாறுமாதயவுசெய்து கூறுங்கள். தங்களைப் போன்ற பெரிய ஜோதிடர்களை எங்களால் நேரில் சந்திக்க முடியவில்லை. எனது நிலைமையும் இப்பொழுது சரியாக இல்லைவரை இனி எப்படி பராமரிப்பது என தெரியவில்லை.

பதில்.

(விருச்சிக லக்னம் கடக ராசி. 1ல் சூரி,புத,செவ், 4ல் கேது, 9ல் சந்,குரு, 10ல் சனி,ராகு, 12ல் சுக். 20-11-1988 காலை 6:53, மதுரை.)

உன்னுடைய சகோதரனுக்கு கடந்த ஏழு வருடங்களாக சனியும், செவ்வாயும், பார்த்து பாபத்துவம் பெற்ற கேதுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அவரது நிலை நன்றாக இல்லை. வரும் மார்ச் 2022-ல் இந்த கேதுவின் தசை முடிவுக்கு வரும்.

சனி, செவ்வாயின் ஸ்திர வீடுகளில் இருக்கக்கூடிய ராகு-கேதுக்கள் குரு, சுக்கிர தொடர்புகளை பெறாமல், பாபர்களான செவ்வாய், சனியின் தொடர்புகளை மட்டும் பெற்றால் பாதிப்புகளை தருவார்கள் என்று என்னுடைய சுபத்துவ-சூட்சுமவலு கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறேன்.

உன்னுடைய அண்ணனுக்கு நான்காம் இடமான கும்பத்தில், சனி மற்றும் செவ்வாயின் பார்வை பெற்று, வேறு எவ்வித சுபத்தன்மையும் இல்லாத கேதுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது திருமணத்தை குறிக்கக்கூடிய ஏழாம் பாவகமும் சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பதால் பலவீனமாகியிருக்கிறது.

ஏழாம் அதிபதி சுக்கிரனும் அந்த வீட்டிற்கு ஆறில் மறைந்து வக்ரம் பெற்றிருக்கிறார். கூடுதலாக இருள் கிரகமான, இந்த ஜாதகத்தில் சனியுடன் இணைந்து பாபத்துவம்  பெற்றுள்ள ராகுவின் சாரத்தில் அமர்ந்துள்ளார். ராகுவின் சாரத்தில் அமர்ந்திருக்கும் கிரகம் நல்லபலனைக் கொடுக்க வேண்டுமெனில் ராகு சுபத்துவம் அடைந்திருக்க வேண்டும் என்பது விதி. அதுவும் இங்கே இல்லை.

சுக்கிரன் வக்ரம் அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை அல்லது பெண்கள் சார்ந்த விஷயங்களில் திருப்தியான அமைப்புகள் இருப்பதில்லை. இதன்படி உன் அண்ணனுக்கு அடுத்த வருஷம் ஆரம்பிக்கக் கூடிய சுக்கிரதசை கூட தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய நிலையில் இல்லாததால் திருமண விஷயத்தில் அண்ணனுக்கு நல்ல பதில் இல்லை.

ஜாதகத்தில் அனைத்தையும் விட இளைய சகோதர உறவுகளை காட்டக் கூடிய மூன்றாமிடம் உச்ச குருவின் பார்வையால் வலுத்து இருப்பதாலும், லக்னத்திற்கும் உச்ச குருவின் பார்வை இருப்பதாலும், தம்பி, தங்கைகளின் ஆதரவில் இவருடைய வரும் காலங்கள் நகர்ந்து போகும். தனியே இப்போது பேசிக்கொண்டிருப்பது போன்ற செயல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பிறகு ஓரளவு கட்டுக்குள் இருக்கும். வாழ்த்துக்கள் நன்றாக இருப்பார்.

தினேஷ் முருகன்மதுரை.

கேள்வி.

வணக்கம் ஐயாபன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பது மருத்துவம் படிக்கலாமாநீட் தேர்ச்சி பெறுவேனாஎதிர்காலத்தில் என்னால் புகழ் பெற முடியுமாஇது யோக ஜாதகமாஉங்கள் மதிப்பெண் என்ன?

பதில்.

(மகர லக்னம், கடக ராசி. 1ல் செவ், 3ல் புத,ராகு, 4ல் சூரி, சுக், 6ல் சனி, 7ல் சந், 9ல் குரு, கேது 18-4-2005 அதிகாலை 1-27 மதுரை)

உன்னுடைய ஜாதகப்படி மருத்துவத்திற்கு முதன்மை கிரகமான செவ்வாய், வளர்பிறைச் சந்திரனின் பார்வையிலும், குருவின் பார்வையிலும் அதிகப்படியான சுபத்துவத்தை கொண்டிருப்பதால், உனக்கு கணிதத்தை விட பயாலஜி என்று சொல்லப்படுகின்ற பாடத்தில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

ராசிக்கு 10-ஆம் இடத்தை உச்சமும், சுபத்துவமும் பெற்ற செவ்வாய் பார்ப்பதாலும், நண்பர்கள் தங்களுக்குள் கேந்திரங்கள் என்று சொல்லப்படக்கூடிய நிலையில் சூரியன், சந்திரன், செவ்வாய் இருப்பதாலும், அடுத்தடுத்து யோக தசைகள் வர இருப்பதாலும் நீ நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உறுதியாக மருத்துவர் ஆவாய்.

புகழைக் குறிக்கக்கூடிய மூன்றாம் அதிபதியான குருவும், புதனும் பரிவர்த்தனை அடைந்த நிலையில், மூன்றாம் அதிபதி மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்காலத்தில் நல்ல பெயர் எடுத்து புகழ் பெற்ற மருத்துவராக நல்ல வாழ்க்கை வாழக்கூடிய ஜாதகம் உன்னுடையது. 70 மதிப்பெண்கள் தருவேன். மிகவும் நன்றாக இருப்பாய் தம்பி.  

ரவிசங்கர்திருச்சி.

கேள்வி.

குருஜி வணக்கம்என் ஜாதகத்தில் ஆறுஎட்டுக்குடையவர்கள் உச்சம் பெற்று இருக்கின்றனர்இந்த அமைப்பால் எதிர்கால வாழ்க்கை கஷ்டமாக இருக்கும் என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள்மிகவும் பயமாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?

பதில்.

(மீன லக்னம், துலாம் ராசி. 1ல் சுக், 2ல் சூரி, 3ல் புத,குரு,சனி, 4ல் ராகு, 8ல் சந், 10ல் செவ்,கேது. 6-5-2001, அதிகாலை 3:40 திருச்சி.)

ஒரு ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்கள் உச்சம் பெற்று அமைந்தால், அவரைவிட லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும் என்பது விதி. அதேநேரத்தில், கடன், நோய், எதிரியை கொடுக்கக்கூடிய ஆறுக்குடையவனும், வம்பு, வழக்கு, விபத்து, அசிங்கம், கேவலத்தைக் கொடுக்கக் கூடிய எட்டுக்குடையவனும் உச்சமாக இருந்தாலும், அவர்கள் செய்யக்கூடிய கெடுதல்கள், அவர்களுடைய தசை நடக்கும் போது மட்டுமே நடக்கும்.

உண்மையில் அவயோகர்களின் தசை வாழ்நாளில் வரவில்லை என்றால் அப்படி ஒன்றும் பெரிய கெடுதல்கள் நடக்காது. புக்திகளில் ஆறு, எட்டுக்குடையவர்கள் தசாநாதனுக்கு அடங்கித்தான் பலன் தர வேண்டும் என்பதால் தசாநாதனின் ஆதிபத்தியத்தை முன்னிலைப் படுத்தியே பலன்கள் நடக்கும்.

உனக்கு மீன லக்னமாகி ஆறுக்குடைய சூரியன், எட்டுக்குடைய சுக்கிரன் இருவரும் உச்சமாக இருக்கிறார்கள். ஆயினும் உன்னுடைய வாழ்க்கையில் சுக்கிர தசையும், சூரிய தசையும் தொண்ணூறு வயதுக்குப் பிறகுதான் வரும் என்கின்ற நிலையில் இவர்களால்  உனக்கு கெடுபலன்கள் இல்லை. அதே நேரத்தில் சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனையாகி, இலக்கினாதிபதி மறைமுகமாக லக்னத்திலேயே அமர்கின்ற நிலை பெற்றிருக்கிறார். அவருடைய தசையும் உனக்கு அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கிறது. பரிவர்த்தனை எட்டில் நடக்காததால் எட்டுக்குடையவனை விட இங்கு லக்னாதிபதிக்கே பலம் அதிகம்.

வாழ்க்கை நிலை கொள்ள வேண்டிய இளம் வயதிலேயே பரிவர்த்தனை பெற்ற லக்னாதிபதியின் தசை வருவதால் நீ சற்று யோகக்காரன்தான். எல்லாவற்றையும் விட மேலாக முழுமையான பங்கமற்ற சித்ரா பௌர்ணமி அன்று நீ பிறந்திருக்கிறாய். பௌர்ணமி சந்திரனுக்கு ஆறு மற்றும் எட்டில் குரு, புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் சந்திர அதியோகத்தில் அமர்ந்து, அதில் குருவின் தசையும், பருவத்தில் வரக்கூடிய உயர்தர யோக ஜாதகம் உன்னுடையது.

ஜோதிடம் என்பது விதிகளை விட விதிவிலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு மாபெரும் கலை. பத்தாம் இடத்தில் செவ்வாய் பலமாக இருப்பதும் உனக்கு நல்ல யோகம். ஆகவே 6-8 க்குடையவர்கள் வலுவானால் ஜாதகருக்கு கெடுதல்கள் நடக்கும் என்ற விதி இங்கே உனக்குப் பொருந்தாது. அடுத்தடுத்து குருவோடு இணைந்து சுபத்துவமாக உள்ள சனி, புதன் தசைகளும் உனக்கு வர இருப்பதால் உன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லை. பிறவியில் இருந்தே யோகக்காரன்தான் நீ. வாழ்த்துக்கள். நன்றாக இருப்பாய்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


மாலை மலர்   நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் “மாலைமலர் நாளிதழ்” சென்னை – 600008


இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com