விருச்சிகம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

விருச்சிகம்:

மாதம் முழுவதும் பத்தாமிடத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாயைக் குரு  பார்த்து வலுப்படுத்துவதால் விருச்சிக ராசிக்கு இந்த மாதம் கேட்ட இடங்களில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய சிந்தனை செயல்திறன், தைரியம் ஆகியவை சிறப்பாக செயல்படும் மாதம் இது. கேது ராசியில் இருப்பதால் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை முழுக்க நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். பணவரவு உள்ள மாதம் இது. பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். நீண்ட நாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த மாதம் பார்த்து மனம் மகிழ உரையாடலாம். விருந்து கொடுக்கலாம். புதிய வீடு வாங்கலாம். இருக்கும் வீட்டை மேம்படுத்தலாம். புதிய நல்ல ஆடம்பரமான வாகனம் அமையும். வசதிக்குறைவான வீட்டில் இருப்பவர்கள் நல்ல வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் வராது. எதிலும் வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து உதவுவார்கள். சூதாட்டம் பங்குச்சந்தை கை கொடுக்கும். வீட்டுப் பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம்தான். பொருட்கள் தங்காது. விற்றுத் தீர்ந்து விடும். ஆனால் விற்ற லாபம் எங்கே என்று கல்லாவில் தேடுவீர்கள். பணம் இருக்காது. வேறு வழியில் செலவழிந்து போய்விடும். கூட்டுத் தொழில் சிறப்படையும்.  தந்தைவழி உறவினர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும்.

வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதம்தான். வேலை செய்யும் இடத்தில் சுற்றியுள்ள பெண்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் வரும் என்பதால் அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. குறிப்பாக பெண்களின் கீழே வேலை செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். மாத பிற்பகுதியில் ஆறாமிடம் பாபத்துவம் பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இனிமேல்  நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள்.

1,2,3,7,8,9,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி மதியம் 3.07 மணி முதல் 7-ம் தேதி அதிகாலை 1.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள், ஆரம்பங்கள் எதையும் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதமோ, வீண் பிரச்சனைகளையோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.