ரிஷபம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

ரிஷபம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் பகை வீட்டில் செவ்வாயுடன் இருப்பதோடு பிற்பகுதி நாட்கள் நீச்ச நிலையிலும் இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுமாரான மாதம்தான். அதேநேரம் மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் நீச்சபங்க வலுப் பெறுவதால் அனைத்து பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். புதன் அதிநட்பு நிலையில் நான்காமிடத்தில் இருப்பது யோக அமைப்பு என்பதால் கவலை எதுவும் இல்லை. ரிஷப  ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள் என்பதால் ஆகஸ்டு மாதம் உங்களின் குணநலன்களுக்கு ஏற்ப நன்மைகளை மட்டும் தரும்.


பத்தில் குரு இருப்பதால் ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடைபெறும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து கௌரவம் உயர்வான நிலையில் இருக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் மதகுருக்களின் நேரடி ஆசிகள் கிடைக்கும். 

தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். இதுவரை தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி உங்களின் மனம் போல் நடக்கும். இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் உண்டு. மஞ்சள்நிற தொழில், வட்டிக்கு விடுதல் பணம் அதிகம் புரளும் இடங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். குறிப்பிட்ட சிலருக்கு வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உல்லாசப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு. பெண்களுக்கு இது நல்லமாதம். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாரம் என்பதில் சந்தேகம் இல்லை.1,2,4,7,11,16,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி அதிகாலை 1.35 மணி முதல் 20-ம் தேதி அதிகாலை 4.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.