மேஷம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் அதிநட்பு வீட்டில் குருவின் பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. எல்லாவகையிலும் சந்தோஷமாக இருப்பீர்கள். அவரவர்களின் வயதுக்கு தகுந்தபடி நல்ல விஷயங்கள் மட்டுமே இந்த மாதம் நடக்கும். குறிப்பாக இளைய பருவத்தினரின் ஆனந்த மாதம் இது. பருவத்திற்கேற்ப உல்லாசமாக இருப்பீர்கள். ஆணுக்கு, பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அறிமுகப்படுத்தும் மாதம் இது. எதிர்கால நன்மைக்கு தேவையான அத்தனையும் இப்போது கிடைக்கும். உங்களில் பரணி நட்சத்திரத்தினருக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகள் இந்த மாதம் அமையும்.


வருமானத்தை விரயம் செய்வீர்கள் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். உங்களில் சிலருக்கு கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும்.  இறுதியில் நிச்சயம் பணம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களிடம் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். நீங்கள் மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வரும். மூத்தவர்களிடம் பெயரைக் கெடுத்துக் கொள்ளும் மாதம் இது. உங்களின் துடுக்குத் தனத்தை கட்டுக்குள் வையுங்கள்.

கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.2,3,4,5,11,12,13,28,29,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம் தேதி இரவு 10.46 மணி முதல் 18-ம் தேதி அதிகாலை 1.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட நாட்களில் நீண்ட பிரயாணங்களோ, புதிய முயற்சிகளோ செய்வதை தவிர்ப்பது நல்லது

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.