மீனம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மீனம்:

எப்போதோ ஒருமுறை நன்றாக அமையும் கோட்சார கிரகநிலைகள் இப்போது மீனத்திற்கு அமைந்திருக்கின்றன. ஆனாலும் உங்களில் நிறையப்பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பிறந்த ஜாதகப்படி நன்மை தரும் தசா, புக்திகள் அமையாத சிலர் அதிகமாகக் கஷ்டப்படுகிறீர்கள். ராசிப்படி பலன் சொல்வது இன்றைய கிரக நிலையான கோட்சார நிலையை கணித்து சொல்லப்படுவது. ஆனாலும் நீங்கள் பிறந்த ஜாதகத்தின் படி என்ன தசா, புக்திகள் நடக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியம். தசா, புக்தி அமைப்பு சரியில்லை என்றாலும் கோட்சார நிலைகளை வைத்து ஓரளவிற்கு சமாளிக்க முடியும். எனவே மீனத்திற்கு பெரிய கெடுதல்கள் எதையும் சொல்வதற்கு இல்லை.


நல்ல தசாபுக்தி அமையப் பெற்ற மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் மனதளவிலும் உடல்நிலையிலும் பத்துவயது குறைந்து புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள். நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இந்த மாதம் ஆரம்பிக்கும். உங்களின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குறிப்பாக சொல்லப்பட வேண்டிய ஒரு பலன் என்னவென்றால் இதுவரை எந்த ஒரு விஷயத்திலும், யார் உதவியும் கிடைக்காமல் தனி மனிதனாகவே போராடி கொண்டிருந்தவர்களுக்கு இனி அடுத்தவர்களின் உதவி தாராளமாக கிடைக்கும்.கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். சிலருக்கு சுபச் செலவுகளும், விரயங்களும் இருக்கும். செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும். அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள். அரசு,  தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை, வியாபாரம் தொழில் லாபத்துடன் இயங்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. சிலருக்கு நிறைய மாற்றங்கள் இருக்கும்.

3,5,6,11,13,14,21,22,23,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி இரவு 7.28 மணி முதல் 15-ம் தேதி இரவு 10.46 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.