மிதுனம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மிதுனம்:

அஷ்டமச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கும் என்பதால் மிதுனத்தினர் கடுமையாக உழைக்க வேண்டிய மாதம் இது. உங்களில் பலருக்கு எதிர்காலம் பற்றிய குழப்பங்களும், வேலை, தொழிலில் சாதகமற்றவைகளும் இப்போது இருக்கும். அதேநேரத்தில் பிரச்சினைகள் அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.  எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். எதுவும் எல்லை மீறாது. கவலைப் படும்படி எதுவும் நடக்காது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த தயக்கமும், மெத்தனமும் விலகி சுறுசுறுப்பு அதிகமாகும் என்பதால் சாதனைகளைச் செய்ய நீங்கள் வரவேற்க வேண்டிய மாதம் இது.


உங்களின் பக்கத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையாக நடந்து கொள்ள மாட்டார்கள். துரோகம் துரத்தும் மாதம் இது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்க வைக்கும் சம்பவங்கள் சிலருக்கு நடைபெறும். கோபத்தைக்  கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். மனைவியின் பொறுப்பில் எல்லாவற்றையும் விட்டு விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம்.

மிதுனத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாத நிலைமை இருக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம்.  வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.2,4,6,10,14,15,22,23,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி அதிகாலை 4.21 மணி முதல் 22-ம் தேதி காலை 7.57 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.