மகரம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மகரம்:

ராசியில் சனி இருப்பதால் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். சில மகர ராசியினர் வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் இருக்கிறீர்கள். முப்பது வயதுகளில் இருக்கும் மகர  ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக் கொடுக்கக் கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பணம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். யோகாதிபதி சுக்கிரன் வேறு மாதம் முழுவதும் பலவீனம் அடைவதால் பெண்களால் மனக்கஷ்டங்களும் குறிப்பாக சிலருக்கு அந்நிய மத வேற்று மத, இன, மொழி இளம் பெண்களால் மனக்கசப்புகளும், பிரச்சினைகளும் இருக்கும்.


கடன் பிரச்னைகள் எட்டிப் பார்க்கும். வருமானம் போக்குக் காட்டும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். எதிலும் கவனமாக இருங்கள். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். ஆடம்பர விஷயத்தில் செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம். கணவன், மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். மூன்றாம் மனிதரின் கோள்மூட்டலை நம்பி ஒருவருக்கொருவர் மனச்சங்கடத்திலும் இருப்பீர்கள். வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கும்.  சிலர் வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு.

மகரராசி இளைஞர்களுக்கு முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்தமாதம் நல்லவைகள் நடக்கும். கிரக அமைப்புகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசியில் உள்ள சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். குறிப்பாக திருவோணம்  நட்சத்திரக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சனி இப்போது உங்களின் நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள், வேலையில் நெருக்கடிகள், மன அழுத்தம் தரும் சம்பவங்கள், காதல் தோல்வி போன்றவைகள் இருக்கும். எதிலும் நிதானமும், தைரியமும் தேவைப்படும்.

5,6,7,11,12,13,19,24,25,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம் தேதி காலை 9.50 மணி முதல் 11-ம் தேதி மதியம் 3.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய ஆரம்பங்கள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். கூடுமான வரை நீண்ட பிரயாணங்களை தவிர்ப்பதும் நல்லது.  

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.