துலாம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

துலாம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் பகை வீட்டில் செவ்வாயுடன் இணைந்து பலவீனம் அடைந்திருந்தாலும், பிற்பகுதியில் நீச்சபங்க நிலையில் இருப்பதால் சரளமான பணப் புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும் மாதம் இது. சூரியன் வலுவாக இருப்பதால் உங்களில் தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு. வாழ்க்கைத் துணையால் லாபம் உண்டு. இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும்.


ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து மாதமானால் ஒரு நிலையான வருமானம் வரும். வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். உங்களில் சிலருக்கு மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் பெற்றோரிடம் கருத்து வேற்றுமைகளும், பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர்  கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். சிலருக்கு சுபச் செலவுகளும், விரயங்களும் இருக்கும். செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தர மாட்டார்கள்.  கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும். அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள்.  மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் துலாத்தின்  பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.1,2,4,10,11,12,21,24,25,28 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம் தேதி அதிகாலை 2.22 மணி முதல் 4-ம் தேதி மதியம் 3.07 மணி வரையும், மாத பிற்பகுதியில் 29-ம் தேதி காலை 10.19 மணி முதல், 31-ம் தேதி காலை 11.12 மணி வரையிலும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆயினும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.