தனுசு: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

தனுசு:

உங்களை சந்தோஷப்படுத்தும் மாதம் இது. தனுசுக்கு இனிமேல் கஷ்டங்கள் என்று சொல்ல எதுவுமே இல்லை. மாதம் முழுவதும் யோகாதிபதி செவ்வாய் தனது நீச்ச நிலை நீங்கி அதிநட்பு வீட்டில் குருவின் பார்வையில் அமரப் போவதால் தனுசு  ராசிக்காரர்களின் தயக்கங்களும், பயங்களும் விலகுகின்ற மாதம் இது. கடந்த சில மாதங்களாக கடுமையான நெருக்கடிகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து, மனஅழுத்ததில் நிம்மதியின்றி இருக்கும் தனுசு ராசிக்காரர்களின் துயரங்கள் இப்போது நீங்க ஆரம்பிக்கும்.


ஆகஸ்ட் மாதம் தனுசு ராசிக்கு ஆனந்த மாதம்தான். வருமானமும், எதிர்பாராத பண வரவும் வரும். வேலைக்கு செல்லும் மனைவியால் பண உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உங்களில் சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. அலட்சியம் வேண்டாம். பெண்கள் விஷயத்தில் கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.இளைஞர்களின் மனோதைரியம் கூடுதலாகும். பிரச்னைகளை இனிமேல்  சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால்  நன்மைகள் உண்டு. புதிய முயற்சிகளை எதையும் உடனே செய்யலாம். அனைத்தும் கூடிவரும்.  

பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். இதுவரை மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். தனுசுக்கு நல்லவைகள் மட்டுமே நடக்கும் மாதம் இது.

3,8,11,12,13,14,21,22,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி அதிகாலை 1.54 மணி முதல் 9-ம் தேதி காலை 9.50 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். மேற்கண்ட தினங்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. 

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.