சிம்மம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

சிம்மம்:

மாத முற்பகுதியில் சூரியன் பனிரெண்டில் மறைந்திருந்தாலும் பிற்பகுதியில் அவர் ராசியில் ஆட்சி பெறுவது யோக அமைப்பு என்பதால் ஆகஸ்டு மாதம் உங்களுக்கு கெடுதல்கள் இல்லாத மாதமாக இருக்கும். உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. குரு ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் ராசி வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்த சகலமும் இப்போது கிடைக்கும். ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் இப்போது வெற்றியாகும். சிம்மத்தினர் அனைவருமே புத்துணர்ச்சி பெறும் மாதம் இது.


ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட்,கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். மாத பிற்பகுதியில் சுக்கிரன் நீச்சமாகி எட்டாமிடத்தைப் பார்க்கிறார். ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தை வலுப்படுத்தினால் அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் என்பதால் எட்டாமிட சுக்கிர பார்வையால் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் இந்த மாதம் நடக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அதேநேரம்  எட்டாமிடம் புதையல் லாட்டரி போன்ற திடீர் பணலாபத்தைக் குறிக்கும் இடம் என்பதால் நல்ல பணவரவு ஒன்றும் இந்த மாதம் உண்டு.

இளைய பருவத்தினருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு  வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களை கண்காணிப்பது அவசியம். கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கலாம். குறுக்குவழி சிந்தனைகள்  வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்திருந்தவர்கள், வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பூர்வீகச் சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது.1,2,4,5,6,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 24-ம் தேதி மதியம்  1.38 மணி முதல் 26-ம் தேதி இரவு 10.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.