கும்பம்: 2021 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

கும்பம்:

மாதம் முழுவதும் சுக்கிரன் பலவீனமாகி அவரது வீட்டில் ராகு இருப்பதால் இந்த மாதம்  எவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கூடுமான வரையில் சண்டையை தவிர்ப்பது நல்லது. யாரையாவது நீங்கள் திட்டினால் அது பலித்து பெரிய மனஸ்தாபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். உயிர் நண்பர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களிடம் சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அரசியல்வாதிகள் பேசும் போது கவனம் தேவை. கணவன் மனைவி அனுசரித்துப் போனால் குடும்பத்தில் அமைதி இருக்கும். ஒருமுறை ராகு,கேது பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று பரிகாரங்களை செய்து வாருங்கள்.


பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.  என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த மாதம் சுமாரான மாதமாகத்தான் இருக்கும். ஏழாமிடத்திற்கு பாபகிரக தொடர்பு இருப்பதால் கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. உங்களை கோபப்படுத்தி எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். நண்பர்களே உங்களின் கோபத்தால் பாதிக்கப்பட்டு எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். பொதுவில் இளையவர்களுக்கு நிதானமான பலன்களும், பெரியவர்களுக்கு நல்ல பலன்களும் நடக்கும் மாதம் இது.   3,8,9,10,16,17,18,19,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம் தேதி மதியம் 3.23 மணி முதல் 13-ம் தேதி இரவு 7.28 மணி வரை  சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் மேற்கண்ட தினங்களில் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.