விருச்சிகம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

விருச்சிகம்:

சோதனைகளை சாதனைகளாக மாற்றக் கூடியவர்கள் விருச்சித்தினர் என்பதால் இது உங்களுக்கு நல்ல மாதம்தான். இந்த லாக்டவுன் காலத்தில் கூட உங்களுக்கு  கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை. உங்களில் சிலருக்கு எதற்கும் இருந்து வந்த தடைகள் இப்போது விலகும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கூடி வரும். உங்களின் நல்ல மாதம் இது. வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடு, சண்டை, சச்சரவு போன்ற சமாச்சாரங்கள் இருந்தவர்கள் சமாதானமாகச் செல்வீர்கள்


சுதந்திரத்தை இழந்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் லாக்டவுன் நிலைமை படிப்படியாக மாறும். தொழில், வேலை இடங்களில் எவ்வித இழப்புகளுக்கும் வாய்ப்பு இல்லை குறிப்பாக வேலையைப் பற்றி பயந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கும், தொழில் முன்பைப் போல நடைபெறுமா என்று என்ற சந்தேகத்தில் இருக்கும் நடுத்தர வயதினருக்கும், மீண்டும் பழையபடியே தொழில் நடக்கும்.

விருச்சிக ராசிக்கு நல்லவைகள் நடக்கும் மாதம் இது. அனுஷத்தினர்களுக்கு நடந்து வந்த கெடுதலான அமைப்புகள் விலகி துன்பங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் துவங்கி விட்டன. கேட்டை நட்சத்திரக்காரர்களில் சிலருக்கு மட்டும் சனி விட்ட குறை தொட்ட குறையாக இன்னும் மன உளைச்சல்களைத் தந்து கொண்டிருக்கிறார். எதுவாக இருந்தாலும் ஏற்கனவே பறித்த நிம்மதி உட்பட அனைத்தையும் இப்போது மூன்றாமிடத்தில் இருக்கும் சனி இரட்டிப்பாகத் தருவார் என்பதால் எவ்விதமான கலக்கத்திற்கும் இடம் கொடாமல் தன்னம்பிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டிய மாதம் இது. கோரோனாவையும் மீறி உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.

ஏழரைச்சனியின் போது கிடைத்த கடுமையான அனுபவங்களினால் சிலர் சில விஷயங்களில் என்ன முடிவு எடுப்பது என்ற தடுமாற்றத்தில் இருப்பீர்கள். பக்கத்தில் வைத்திருந்தால் ஆபத்துத்தான் என்று தெரிந்தும் ஒருவரை விலக்க முடியாத அவஸ்தையிலும் இருப்பீர்கள். இது போன்றவர்களுக்கு நல்ல தீர்வுகள் ஜூன் மாதம் இருக்கும் என்பதால் விருச்சிகத்திற்கு துன்பங்கள் தீரும் மாதம் இது.  இதுவரை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு ஒரு நல்ல முடிவு வரும்.

வெளிநாட்டு தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். ராசிநாதன் செவ்வாய்  குருவின் வீட்டில் இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.

1,2,3,9,11,12,19,20,21,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம் தேதி அதிகாலை 1.09 மணி முதல் 13 -ம்தேதி மதியம் 12.32 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.