மேஷம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மேஷம்

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் குருவின் பார்வையில்  இருக்கிறார். அதன்பிறகு நான்காமிடத்திற்கு மாறி நீச்சனாகி வலுவிழக்கிறார். சில சங்கடமான நிகழ்வுகள் இந்த மாதம் மேஷத்தினருக்கு இருக்கும் என்றாலும், மாத பிற்பகுதியின் யோகாதிபதி சூரியனைக் குரு பார்ப்பதால் சங்கடங்கள் அனைத்தையும் உங்களின் சுய முயற்சியால் நீக்கி சாதிப்பீர்கள். அதேநேரம் சூரியன், சுக்கிரன்  சேர்க்கையால் உங்களில் பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர், பேன்சி கடைக்காரர்கள், துணிக்கடை, மருத்துவத்துறையினர், அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள், கட்டிடம் கட்டும் தொழில் துறையினருக்கு தொழில் நன்மைகள்  இருக்கும். 

கொரோனாவின் தாக்கத்தையும் மீறி கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு லாபங்கள் உண்டு. சீருடை அணியும் காவல்துறை ராணுவம் போன்ற அரசுப் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். மேலதிகாரிகளால் அடிக்கடி விரட்டப்படுவீர்கள் பெண்களுக்கு இது நன்மை தரும் மாதம்தான். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலைசெய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் சுமாரான பலன்கள் நடைபெறும். இளைஞர்களுக்கு எதிர்மறை பலன்கள் நீங்கி, பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும்.

சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக சித்தப்பா பெரியப்பாக்களால்  உதவிகள் இருக்கும். இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் கை கொடுக்கும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு முதலீட்டிற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலை விஷயமாகவோ சிறுகருத்து வேறுபாட்டாலோ, பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் சேர்வீர்கள். இதுவரை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். தம்பதிகளுக்கு நடுவில் சகுனி வேலை பார்த்தவர்களை அடையாளம் கண்டு இருவரும் சேர்ந்து துரத்துவீர்கள். 

1,2,3,7,8,9,11,12,13,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 22 -ம்தேதி காலை 8.59 மணி முதல் 24 -ம்தேதி காலை 9.10  மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தள்ளி வைக்க வேண்டும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.