மீனம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மீனம்:

மாதம்  முழுவதும் யோகாதிபதி செவ்வாய் நீச்சனாகி  வலுவிழப்பதால் மீனத்தினருக்கு சுமாரான நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதம் இது. சனியும் தனது மூன்றாம் பார்வையால் ராசியையும் செவ்வாயையும் பார்ப்பதால் எதிலும் நிதானம் தேவை. யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். கோபக்காரர் நீங்கள். தேவையற்ற கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதே நேரத்தில் பண வரவிலோ சந்தோஷ நிகழ்ச்சிகளிலோ குறை எதுவும் இருக்காது. வேலை, தொழில் அமைப்புகளிலும் பாதிப்புகள் எதுவும் இருக்காது.


உங்களில் சிலர் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்ற இடங்களில் ஏமாற்றங்களையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சிலருக்கு எரிச்சலும், கோபமும் வரக்கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் வருகின்ற நவம்பர் மாத குருப் பெயர்ச்சிக்கு பிறகு நீங்கி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நல்ல விதங்களில் நடக்கும். மாதம் முழுவதும் செவ்வாய் நீச்ச நிலையில் சனியின் தொடர்பில் இருப்பதால் எவரையும் நம்ப வேண்டாம். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. அதே நேரத்தில் மூன்றில் கூடும் கிரக அமைப்புகள் வெளிநாடு, வெளிமாநிலம் சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகளைத் தரும்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். ஜூலை மாதத்திற்கு மேல் வேலைமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை நடக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் அப்போது வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன், ராகுவிடம் இருந்து விலகும் போது உங்கள் வேலையின் மேல் படர்ந்திருந்த இருட்டு விலகி விடும் என்பதால் நிரந்தரமாக எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வரப் போவது இல்லை.

இருள் கிரகமான ராகுவுடன்  புதன், மற்றும் சுக்கிரன் இணையும் நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால் மீன ராசிக்காரர்களுக்கு தயக்கங்கள் உள்ள வாரம் இது. செவ்வாய் நீச்சனாகி சனி ராசியைப் பார்ப்பதால் எதிலும் ஒரு அச்ச உணர்வுடனேயே இருப்பீர்கள். குழப்பங்கள் அனைத்தும் வரும் ஜூலை மாதம் முதல் தீர ஆரம்பிக்கும். கடந்த காலங்களில் உலகில் கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் உங்களையும் விட்டு வைக்கவில்லை.

2,4,5,6,7,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம்தேதி காலை 7.42 மணி முதல் 22-ம்தேதி காலை 8.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம் தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.