மகரம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மகரம்:

ராசியில் சனி இருப்பதால்  எதிர்பார்க்கும் அனைத்தும்  நடக்க முடியாத நிலைமை இந்த மாதம் மகரத்திற்கு ஏற்படும். அதேநேரம்  அனைத்தையும் சமாளித்து வலம் வருவீர்கள். உங்களின் ஈகோவை தூண்டி விட்டு அவசர முடிவு எடுக்க வைக்கும் செயல்கள் இப்போது நடக்கும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. முறைகேடான வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு கவனக்குறைவு, தடுமாற்றம்,விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும் இப்போதிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும், இப்போதைய லாக்டவுன் உள்பட எதுவும் இன்னும் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதால் எதையும் சமாளிக்கும் மனோதைரியத்தை இறைவன் உங்களுக்கு அளிப்பார் என்பது உறுதி.


மகர ராசி இளையபருவத்தினரில் பெரும்பாலோர் ஏழரைச்சனியின் தாக்கத்தால் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். பிறந்த ஜாதக வலுக்கொண்ட சிலருக்கு மட்டுமே பிரச்னைகள் சமாளிக்கக் கூடிய அளவில் இருக்கிறது. குறிப்பாக மகரத்தினர்  அனைவரும் பணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளும் காலகட்டம் இது. ஜூன் மாதம் எதிலும் அகலக்கால் வைக்காமலும், அடுத்தவர்களை நம்பாமலும், தேவையற்ற கடன் விவகாரங்களில் சிக்காமலும் இருக்க வேண்டிய மாதம். முக்கியமாக காதல் விவகாரங்கள் வேண்டாம். இதனால் தூக்கம் வராது.

தாய்-தந்தையர் விஷயத்தில் கருத்து வேற்றுமைகளும் மனச்சங்கடங்களும் இருக்கும் என்பதால் பெற்றோர் சொல்படி கேட்டு நடந்து அவர்களின் மனதைக் குளிர வைப்பது நல்லது. வயதான பெற்றோர்களின் உடல்நலத்திலும் அக்கறை தேவைப்படும். இளையவர்கள் சிலருக்கு அலுவலகங்களில் வேலையை விட்டு விடும்படி நிர்ப்பந்தங்கள் இருக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் இருங்கள். அதேநேரத்தில் நடப்பவைகள் அனைத்தும் உங்கள் எதிர்கால நன்மைக்காகவும் சனி முடிந்த பிறகு உங்களை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நல்லவிதமாக நிலை கொள்ள வைக்கும் என்பதாலும் கவலைகளுக்கு இடமில்லை.

பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை. சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். வயதானவர்கள் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டும். புனித யாத்திரைகள் செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடர்புடையவர்கள், வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு  இந்த மாதம் யோகத்தை தரும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து சங்கடப்படுத்தலாம். 

1,4,5,11,12,13,19,20,21,24 ஆகிய தினங்களில் பணம் வரும். 15 -ம்தேதி இரவு 9.42 மணி முதல் 18 ம்தேதி அதிகாலை 4.07 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.