துலாம்: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாகி, அதன்பின்பு குருவின் பார்வையில் இருப்பது துலாத்தினரின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்லவை நடக்க வைக்கும் ஒரு அமைப்பாக இருக்கும். கோரனாவினால் உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட நிலையில் நீங்களும் அதற்கு தப்பவில்லை.  இந்த மாத கிரக நிலைகளால் தொழில் விஷயங்களில் உங்களுக்கு நல்லவைகள் நடக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


உங்களில் சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த மாதம் நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் மாதம் இது. 

குருபுக்தி அல்லது சுக்கிர புக்தி நடப்பவர்களுக்கு திருமண நிச்சயம் நடப்பதற்கான ஏற்பாடுகள் உண்டு. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். விசாகம் நட்சத்திரத்தினர் சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும்.

பருவ வயது பிள்ளைகளை வைத்திருக்கும் துலாம் ராசிக்காரர்கள் மக்களின் மேல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் கவனம் வயதுக்கே உரிய காதல் போன்ற விஷயங்களில் திரும்பும் ஏதாவது வம்புகளில் சிக்கி கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள். பிள்ளைகள் எந்த நேரமும் வாட்ஸ்அப், பேஸ்புக் என்றே கிடக்கிறார்களே ஏன் என்று பரிசோதியுங்கள். உங்களில் சிலருக்கு வீண் விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் நடக்கும்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். தெய்வ தரிசனம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு ஆன்மிக அனுபவங்கள் உண்டு. நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

1,2,7,8,9,14,15,16,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 8 -ம்தேதி மதியம் 12.23 மணி முதல் 11-ம்தேதி அதிகாலை 1.09  மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது என்பதால் புது முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.