தனுசு: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

தனுசு:

தனுசு ராசிக்கு ஜூன் மாதம் பின்னடைவுகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். அதே நேரத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி சூரியன், ராகுவுடன் இணைந்திருப்பதால் இதுவரை குடும்பத்தில் குழப்பங்களைச் சந்தித்தவர்கள் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். சொல்லிக் கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மைகளைத் தரும்.


இளைஞர்கள் வேலை, தொழில் விஷயத்தில் கவனம் வைக்கவும். ஜூலை இறுதி வரை இந்த நிலைமைதான். அதன்பிறகு அனைத்து நிலைகளும் மாறும் என்பதால் பொறுமை தேவை. பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலைகள் இருக்கும். செய்யும் வேலை அளவிற்கு பணவரவு இருக்காது. கடன் வாங்கியாவது சமாளிப்பீர்கள். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையாளம் காட்டும் கால கட்டம் இது. உங்களில் சிலர் காதலிப்பீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது வாட்ஸ்அப்பில் சந்திப்பீர்கள். உங்களில் உத்திராடம்  நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடுவது நல்லது. டாஸ்மாக் கடை என்ற ஒன்று இருப்பதையே இந்த லாக்டவுன் நேரத்தில் மட்டுமாவது மறந்து விடுங்கள்.

சிலருக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி ஆலயம்  சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவீர்கள். திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஜாதகத்தில் சனி, குரு, கேது தசை நடப்பவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் மேன்மையான பலன்கள் நடக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு எவ்வித குறைகள் இருந்தாலும் பரம்பொருள் அவற்றைக் கனிவுடன் தீர்த்து வைப்பார். ஜூன் மாதத்தில் கெடுதல்கள் எவையும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லை. நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் உண்டு.

ஐந்தாம் அதிபதி செவ்வாய் எட்டில் நீச்சனாகி மறைவதால்  பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தொடர்பு இடைவெளி எனப்படும் தலைமுறை இடைவெளி இப்போது வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இதை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு சிறப்புக்கள் வீடு தேடி வரும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

1,2,4,5,8,9,10,17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 ம் தேதி மதியம்  12.32  முதல் 15  -ம் தேதி இரவு 9.42  மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM – 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.